இந்தியாவில் யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச நாடுகளிலும் யுபிஐ விரிவடையத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் இன்னும் பல பகுதிகளில் இணைய வசதி இல்லாமலும் அல்லது குறைவான இன்டர்நெட் வேகத்துடனும் மட்டுமே கிடைக்கிறது. இதுபோன்ற நகரங்களையும் குறிவைத்து யுபிஐ லைட் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இணைய வசதியே இல்லாமல் பணம் செலுத்தலாம், பணம் பெறலாம். அப்படி இணைய வசதி இல்லாத ஊர்களில் பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட யூபிஐ லைட் வாலட்டின் வரம்பை 5000 ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது.
யுபிஐ லைட் என்றால் என்ன?: யுபிஐ லைட் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டிஜிட்டல் பேமென்ட்களை எளிதாக்கும் வகையில் யுபிஐ லைட் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் இணைய வசதி இல்லாமலும் பணம் செலுத்தலாம். ரிசர்வ் வங்கி முன்பு யுபிஐ லைட் வாலட்டின் வரம்பை 1,000 ரூபாயாக வைத்திருந்தது. தற்போது இந்த வாரம்பை 5000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இருப்பினும் நீங்கள் ஒரு முறை பணம் அனுப்பும்போது 1,000 ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும். யுபிஐ லைட் என்பது UPI-இன் எளிய பதிப்பாகும். இது நெட்ஒர்க் வசதி இல்லாத பகுதிகளில் உள்ள மக்களை குறிவைத்து கொண்டுவரப்பட்டது. சிறிய அளவிலான தொகையை அனுப்புவதற்காக யுபிஐ லைட் பயன்படுகிறது. இணைய இணைப்பு குறைவாக உள்ள பகுதிகளிலும் யுபிஐ லைட் மூலம் மக்கள் பணம் அனுப்புகின்றனர்.
UPI லைட்டின் நன்மைகள்: எளிதாக பணம் செலுத்த முடியும் என்பதே இதன் சிறப்பு. இது முற்றிலும் பாதுகாப்பானது. அன்றாட செலவுகள் மற்றும் சிறிய அளவில் பணத்தை அனுப்புவதற்கு யுபிஐ லைட்டை பயன்படுத்தலாம். இது தவிர மோசமான நெட்வொர்க் உள்ள பகுதிகளிலும் எளிதாக பணம் அனுப்ப முடியும். டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய அரசின் முயற்சிக்கு யுபிஐ லைட் பெரிதும் பங்களித்து வருகிறது.
முதன்முதலாக யுபிஐ தொடங்கப்பட்டபோது யுபிஐ லைட்டின் வரம்பு 1000 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு 2000 ரூபாயாக அரசு அதிகரித்தது. தற்போது இந்த வரம்பை 5000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. இதன் மூலம் ஒரு சில கிளிக்குகளில் ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்குக்கு எளிதாக பணம் அனுப்ப முடியும்.


Click it and Unblock the Notifications