இந்தியாவில் யுபிஐ செயலிகளின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நாட்டின் மூலை முடுக்கெங்கும் யுபிஐ பயன்படுத்தி மக்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள்.
இந்தியாவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு டிஜிட்டல் பேமென்ட் பிரிவாக யுபிஐ இருந்து வருகிறது . நெட் பேங்கிங் ,டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தெரியாத நபர்கள் கூட எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் யுபிஐ கட்டமைப்பு இருப்பதே இதன் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

என்பிசிஐ அமைப்பு யுபிஐ மோசடிகளை குறைக்கவும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்பும் பல்வேறு மாற்றங்களை தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் இருக்கிறது. இதற்காக 2025இல் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. இதன்படி ஒரு நாளைக்கு ஒரு நபர் யுபிஐ-இல் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
ஆனால் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரை யுபிஐ வாயிலாக பணம் செலுத்தலாம் செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வந்துவிட்டது. இதன்படி பங்குச்சந்தை முதலீடுகள் , காப்பீட்டு பிரீமியங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒரு நாளைக்கு பத்து லட்சம் ரூபாய் வரை யுபிஐ வாயிலாக பணம் செலுத்த முடியும் . அதேபோல அரசுக்கு வரி செலுத்துவதற்கும் டிராவல் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கும் 10 லட்சம் ரூபாய் வரை ஒரே நாளில் யூபிஐ வாயிலாக கட்டணம் செலுத்த முடியும்.
கிரெடிட் கார்ட் பேமெண்ட்களுக்கு ஒரே நாளில் ஆறு லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தலாம். அதேவேளையில் லோன் ரீ பேமென்ட் எனப்படும் கடனை திரும்ப செலுத்துதல் தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் இஎம்ஐ கலெக்ஷன்களுக்கும் யூபிஐ செயலி வாயிலாக ஒரே நாளில் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை செலுத்த முடியும் . மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் போதும் யுபிஐ செயலி வாயிலாக ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம்.
பயனாளர்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டு 2025 இல் கொண்டு வந்த மிக முக்கியமான ஒரு மாற்றம். 2026 இல் இதனை இன்னும் மேம்படுத்துவதற்கு என்பிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. தற்போது வரை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் நமக்கு இலவசமாக தான் கிடைக்கின்றன . அதற்கான செலவுகளை மத்திய அரசுதான் ஏற்றுக் கொண்டு வருகிறது.
இனிவரும் ஆண்டுகளிலும் இந்த இலவச சேவை தொடர்ந்து கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது. எனவே தற்போதைக்கு யுபிஐ பயன்படுத்துபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு நாளைக்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 10 லட்சம் ரூபாய் வரை யுபிஐ வாயிலாக பேமெண்ட் மேற்கொள்ளலாம்.
இது தவிர ஒரு நாளைக்கு 50 முறைக்கு மேல் உங்களுடைய யுபிஐ செயலியில் வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை பரிசோதிக்க முடியாது. அவ்வாறு 50 முறைகளை கடந்து விட்டால் உங்களுடைய பேலன்ஸ் செக் பிரிவு பிளாக் செய்யப்படும், 24 மணி நேரத்திற்கு பின்பு தான் அது ஆக்டிவேட் ஆகும்.புது ஆண்டில் யுபிஐ செயலியில் அதிக பரிவர்த்தனை வரம்பு கொண்டு வரப்படலாம் அதற்கு Two Step verification உள்ளிட்டவை கொண்டு வந்து, யுபிஐ பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற வாய்ப்புள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications