முன்னணி வங்கிகளில் UPI பரிவர்த்தனை வரம்பு என்ன தெரியுமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

UPI பேமெண்ட் ஆப்கள் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வங்கிக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று பணம் எடுப்பது, பணம் அனுப்புவது, பணம் டெபாசிட் செய்வது போன்ற சேவைகளை பெற்று வந்த வாடிக்கையாளர்கள்.. தற்போது வீட்டிலிருந்தே UPI பேமெண்ட் அப்ளிகேஷன்கள் மூலம் எளிதில் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் பலருக்கும் வங்கிகளின் ஒரு நாளைய பணப்பரிவர்த்தனை வரம்பு எவ்வளவு என்ற விவரங்கள் தெரியாமல் இருக்கும். இது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்பது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்டது. எனவே UPI மூலம் நீங்கள் பணம் அனுப்பும்போது, அந்த பரிவர்த்தனைகள் வங்கிகள் மற்றும் NPCI அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதாவது பணம் அனுப்புவதற்கு வரம்புகள் அமைக்கப்படுகின்றன. இது பலருக்கும் தெரியாமல் இருப்பதால் சில நேரங்களில் சிக்கல்களை அனுபவிக்கக்கூடும். எனவே ஒவ்வொருவரும் எவ்வளவு UPI பரிவர்த்தனை வரம்பு இருக்கிறது.. என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

 முன்னணி வங்கிகளில் UPI பரிவர்த்தனை வரம்பு என்ன தெரியுமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!


UPI பரிவர்த்தனை வரம்புகள்: UPI-ஐப் பயன்படுத்தும் P2P பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரம்பு இருந்தாலும், உங்கள் வங்கி அவற்றை அனுமதிக்காது. வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு UPI பரிவர்த்தனை வரம்புகளைக் கொண்டுள்ளன.

HDFC பேங்க்: HDFC பேங்க், P2P UPI பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்தை வரம்பாக நிர்ணயித்துள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் ஒரு வங்கிக் கணக்கிற்கு 20 பரிவர்த்தனைகள் வரை செய்யலாம்.

ஐசிஐசிஐ பேங்க்: ஐசிஐசிஐ பேங்க் இணையதளத்தின்படி, ஒட்டுமொத்த பரிவர்த்தனை மதிப்பு 1 நாளைக்கு ரூ. 1 லட்சம் ஆகும். முதல் பரிவர்த்தனையிலிருந்து 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 10 பரிவர்த்தனைகள் செய்யலாம்.

SBI பேங்க்: SBI பேங்க் தினசரி பரிவர்த்தனை வரம்பாக ரூ. 1,00,000 ரூபாயை நிர்ணயித்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா: இந்த வங்கியில் ஒரு நாளைக்கு மொத்தம் ரூ. 1,00,000 வரை UPI மூலம் அனுப்பலாம். வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: ஒரு பரிவர்த்தனைக்கு UPI மூலம் அனுப்பக்கூடிய அதிகபட்ச தொகை ரூ. 1 லட்சம்.

கனரா பேங்க்: ஒட்டுமொத்த பரிவர்த்தனை மதிப்பு 1 நாளைக்கு ரூ. 1 லட்சம் ஆகும். முதல் பரிவர்த்தனையிலிருந்து 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகள் செய்யலாம்.

PNB பேங்க்: தற்போது, ​​ஒரு UPI பரிவர்த்தனைக்கான அதிகபட்ச வரம்பு ரூ. 1 லட்சம் ரூபாயாக உள்ளது.

கோடக் மஹிந்திரா பேங்க்: UPI-ஐப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்தை அனுப்பலாம் மற்றும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+