கடந்த 2016-ம் ஆண்டு, கிட்டத்தட்ட ரிலையன்ஸ் ஜியோ வந்த போது தான், இந்த UPI என்று சொல்லப்படுகிற யுனிஃபைட் பேமெண்ட் இண்டர்ஃபேஸ்sஏவையும் கொண்டு வரப்பட்டது.
இந்த யூபிஐ வந்த பின், இந்தியாவில் பணப் பரிமாற்றத்தின் தன்மையே மாறிவிட்டது என்று சொன்னால் மிகை இல்லை.
அந்த அளவுக்கு ஒரு சாதாரண மனிதன் கூட யூபிஐ பயன்படுத்தி பணத்தை அனுப்பவோ அல்லது மற்றவர்களிடம் இருந்து பணத்தை பெறவோ முடிகிறது.
பிப்ரவரி 2020
கடந்த பிப்ரவரி 2020-ம் மாதத்தில் யூபிஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்படும் எண்ணிக்கை 132.32 கோடியைத் தொட்டு இருக்கிறது. மொத்தம் 2.2 லட்சம் கோடி ரூபாய் இந்த யூபிஐ மூலம் பணப் பரிமாற்றம் நடந்து இருக்கிறது. ஆக தொடர்ந்து யூபிஐ பணப் பரிமாற்றம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அக்டோபர் முதல் வளர்ச்சி
கடந்த அக்டோபர் 2019-ல் இருந்து யூபிஐ பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிக் கொண்டே இருக்கிறது. அதோடு சுமார் 12,800 பேரிடம் யூபிஐ பற்றிக் கேட்ட போது சுமார் 60 % பேருக்கு யூபிஐ பற்றிய போதுமான விவரங்கள் தெரிந்து இருக்கின்றனவாம். ஆக மக்கள் மத்தியிலும் யூபிஐ செம பாப்புலராக இருக்கிறது. இந்த நேரத்தில் தான் NPCI ஒரு முக்கிய முடிவை எடுத்து இருக்கிறது.
2 லட்சம்
National Payments Corporation of India (NPCI) என்கிற அமைப்பு தான், இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் துறையை நிர்வகிக்கிறது. இந்த என் பி சி ஐ அமைப்பு, வரும் ஏப்ரல் 01, 2020 முதல் யூபிஐ வழியாக செய்யப்படும் பணப் பரிமாற்றங்களுக்கான அளவை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயாக அதிகரிக்க இருக்கிறார்களாம்.
தயார் ஆகுங்கள்
எனவே National Payments Corporation of India (NPCI), யூபிஐ பேமெண்ட் நெட்வொர்க்கில் இருக்கும் அனைத்து வங்கிகளுக்கு இந்த பணப் பரிமாற்ற அளவை, அதிகரிக்க இருக்கும் விஷயத்தை சொல்லி தயார்படுத்தி இருக்கிறார்களாம். மொபைல் அப்ளிகேஷன் மற்றும் சிஸ்டம்-களில் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்ய வேண்டுமோ அவைகளை எல்லாம் செய்யச் சொல்லி இருக்கிறார்களாம்.
யாருக்கு பொருந்தும்
இந்த 2 லட்சம் ரூபாய் பணப் பரிவர்த்தனை வரம்பு, யூபிஐ-ல் இருக்கும் verified merchant- நடத்தும் கடைகளுக்கு பொருந்துமாம். அதே போல நிதி சார்ந்த முதலீடுகள், இன்சூரன்ஸ் பிரீமியம், மியூச்சுவல் ஃபண்ட் செலுத்துவது போன்றவைகளுக்கும் பொருந்துமாம். இந்த புதிய 2 லட்சம் ரூபாய் வரம்பு, சாதாரணமாக இரண்டு நபர்களுக்கு மத்தியில் பணப் பரிமாற்றம் செய்யும் போது பொருந்தாது. இது தான் அந்த கண்டீஷன்.


Click it and Unblock the Notifications