நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) நாட்டில் மில்லியன் கணக்கான வரி செலுத்துவோர் பயனடையும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 16, 2024 முதல், தனிநபர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 5 லட்சம் வரையிலான வரிகளைச் செலுத்த யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸை (யுபிஐ) பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரி செலுத்துவோருக்கு பாதுகாப்பான மற்றும் எளிமையான பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய UPI பரிவர்த்தனை வரம்பு: ஆகஸ்ட் 24, 2024 தேதியிட்ட சுற்றறிக்கையில், வரி செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக NPCI அறிவித்தது. இந்த மாற்றம் வரி செலுத்தும் செயல்முறையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு UPI-ஐப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய UPI பரிவர்த்தனை வரம்பு மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஐபிஓக்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் சில்லறை நேரடித் திட்டங்கள் உள்ளிட்ட பிற பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். ஆனால் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் மற்றும் UPI ஆப்-கள் இந்த புதிய வரம்புகளுடன் பொருந்துமா? என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
இந்த அதிகரிக்கப்பட்ட வரம்பு குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். "யுபிஐ பயன்படுத்தி வரி செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தும் என்பிசிஐ அறிவிப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இது டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இந்தியாவை உயர்த்தும். இந்த முன்முயற்சி வரி வசூல் முறையை மேம்படுத்தும் மற்றும் வரி செலுத்துவோருக்கு மிகவும் வசதியான கட்டண முறையை வழங்கும் என்று என்டிடி டேட்டா பேமென்ட் சர்வீசஸ் இந்தியாவின் சிஎஃப்ஓ ராகுல் ஜெயின் கூறியுள்ளார்.
பியர்-டு-பியர் பரிவர்த்தனைகளுக்கான UPI பரிவர்த்தனை வரம்பு ரூ. 1 லட்சம் ஆகும். ஆனால் வங்கிகள் தங்கள் சொந்த வரம்புகளை அமைக்க அதிகாரம் உள்ளது. எடுத்துக்காட்டாக, அலகாபாத் வங்கியின் UPI பரிவர்த்தனை வரம்பு ரூ. 25,000, அதே சமயம் HDFC பேங்க் மற்றும் ICICI பேங்க் ஆகியவை பியர்-டு-பியர் பேமெண்ட்டுகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன. கூடுதலாக, வெவ்வேறு UPI ஆப்கள் மாறுபட்ட பரிவர்த்தனை வரம்புகளைக் கொண்டிருக்கலாம்.
காப்பீடு மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் தொடர்புடைய பிற வகையான UPI பரிவர்த்தனைகளுக்கு தினசரி வரம்பு ரூ. 2 லட்சமாகும். எனவே ஒரு நபர் UPI செயலியைப் பயன்படுத்தி பரிமாற்றம் செய்யக்கூடிய பணத்தின் அளவு, அவர்களின் வங்கி மற்றும் அவர்கள் பயன்படுத்தும் UPI செயலி நிர்ணயித்த குறிப்பிட்ட வரம்புகளையும் பொறுத்தே அமைகிறது.


Click it and Unblock the Notifications