நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் முதுகெலும்பாக விளங்கும் UPI மூலம் இனி ரூ.3,000க்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வணிகர் கட்டணங்களை (Merchant Charges) மீண்டும் கொண்டுவருவதற்கான திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MDR என்றால் என்ன? ஏன் மீண்டும் கொண்டுவரப்படுகிறது?: டிஜிட்டல் கட்டண சேவைகளை வழங்குவதற்காக வணிகர்களிடம் வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் வணிக தள்ளுபடி விகிதம் (MDR - Merchant Discount Rate) ஆகும். தற்போது, RuPay டெபிட் கார்டுகள் மற்றும் UPI கட்டணங்கள் இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

மார்ச் மாதத்தில் ஈடி வெளியிட்ட ஒரு செய்தியின்படி, வங்கிகள் மத்திய அரசுக்கு ஒரு முறையான திட்டத்தை அனுப்பியுள்ளன. இந்தத் திட்டத்தில், சரக்கு மற்றும் சேவை வரி (GST) அடிப்படையிலான ஆண்டு வருவாய் ரூ.40 லட்சத்திற்கு மேல் உள்ள பெரிய வணிகர்களுக்கு இந்தக் கட்டணம் மீண்டும் கொண்டுவரப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், சமீபத்திய அறிக்கையின்படி, ரூ.3,000-க்கு மேல் உள்ள பெரிய பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வணிகர் கட்டணம் விதிக்கப்படும் என்றும், சிறு தொகைப் பரிவர்த்தனைகள் விலக்கு அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
MDR நீக்கத்தின் தாக்கம்: MDR நீக்கம் UPI பயன்பாட்டை பெரிய அளவில் அதிகரித்தது. ஆனால், இது வங்கிகள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் (fintech companies) மற்றும் கட்டண சேவை வழங்குநர்களுக்கான (payment service providers) முக்கிய வருவாயையும் பாதித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு வாக்கில், UPI இன் பரிவர்த்தனை அளவு ரூ.17,221 கோடியாக உயர்ந்தது. அதே நேரத்தில், நாட்டின் மொத்த டிஜிட்டல் கட்டண அளவு ரூ.20,787 கோடியை எட்டியது.2018 ஆம் ஆண்டில் ரூ.5.86 லட்சம் கோடியாக இருந்த UPI பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு, 2024 ஆம் ஆண்டில் ரூ.246.83 லட்சம் கோடியாக உயர்ந்து, இந்தியாவில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கட்டண முறையாக UPI உருவெடுத்தது.
மூத்த வங்கியாளர்களும் ஆய்வாளர்களும் ஒரு பெரிய சில்லறை வணிகர் வழக்கமாக தனது பரிவர்த்தனைகளில் 50% க்கும் அதிகமானவற்றை கார்டுகள் மூலம் பெறுகிறார்கள். அவர்கள் ஏற்கனவே பிற டிஜிட்டல் பேமெண்ட் கட்டணம் செலுத்தி வருகின்றனர். எனவே, இதேபோன்ற ஏற்பாடு அதிக மதிப்புள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கையாள்வதில் வங்கிகள் மற்றும் கட்டண வழங்குநர்களை ஆதரிக்கும்.
தொழில்துறை கோரிக்கை மற்றும் எதிர்கால பார்வை: டிஜிட்டல் கட்டண நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய கட்டண கவுன்சில் (Payments Council of India), மார்ச் 24 அன்று பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில், வங்கிகள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் கட்டண நிறுவனங்கள் கூட்டாக ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி செலவிடுவதாகவும், இந்திய தொடக்க நிறுவனங்களில் சுமார் 20% UPI வழியாக சேவை செய்யப்படுவதாகவும் கூறியிருந்தது.
ET அறிக்கையின்படி, நாட்டில் சுமார் 60 மில்லியன் வணிகர்கள் டிஜிட்டல் பேபெண்ட்களை ஏற்றுக்கொள்கிறார்கள், இதில் 90% பேர் சிறு வணிகர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போதைய சூழ்நிலையில் பூஜ்ஜிய-MDR முறை சாத்தியமில்லை. அதிக அளவு UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள், சிறு வணிகர்கள் அல்லது அன்றாடப் பயனர்களைப் பாதிக்காமல் இந்த செலவுகளை மீட்டெடுக்க உதவும்.
இந்த நடவடிக்கை, டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவைகளை நிலையானதாக மாற்றுவதற்கும், அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான நிதியாதாரத்தைப் பெறுவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு இதனை மறுத்துள்ளது.
UPI பேமெண்ட் வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அறிக்கைகளை நிதி அமைச்சகம் நிராகரித்ததைத் தொடர்ந்து, பணம் செலுத்தும் தளமான Paytm-ஐ இயக்கும் One 97 Communications நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை BSE-யில் 10% வரை சரிந்து ரூ.864.20 ஆகக் குறைந்தன.
முன்னதாக, ரூ.3,000க்கு மேல் உள்ள UPI பரிவர்த்தனைகளுக்கு MDR விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், நிதி அமைச்சகத்தின் இந்த தெளிவுபடுத்தல், அந்தக் கூற்றுகளை மறுத்துள்ளது. இந்திய கட்டண கவுன்சில் (Indian Payments Council) முன்பு MDR-ஐ மீண்டும் அறிமுகப்படுத்தக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு பங்குச் சந்தையில் பேடிஎம் பங்குகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தினாலும், UPI தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது. மே மாதத்தில் மட்டும் 18.68 பில்லியன் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தி, மொத்தம் ரூ.25 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. UPI-யின் இந்த அசுர வளர்ச்சி, அதன் இலவசப் பயன்பாட்டிலேயே தொடரும் என்பதை நிதி அமைச்சகத்தின் அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications