8,659 கோடி பணப்பரிவர்த்தனை! பணத்தை விட்டு UPI-ஐ நாடும் மக்கள்! UPI பரிவர்த்தனை வளர்ச்சி கிடுகிடு!

2024 முதல் 2025-ஆம் நிதியாண்டில் முதல் 5 மாதங்களில் அதாவது ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் டிஜிட்டல் பேமெண்ட் தளங்களின் மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு 1,669 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அளவு 8,659 கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. UPI பரிவர்த்தனைகளின் மதிப்பு 138 சதவீதம் உயர்ந்து ரூ.1 லட்சம் கோடியிலிருந்து ரூ.200 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கூடுதலாக, கடந்த 5 மாதங்களில், மொத்த பரிவர்த்தனை மதிப்பு ரூ.101 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

2017 முதல் 2018-ஆம் நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் 18,737 கோடியாக அதிகரித்து, இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரிப்பைக் கண்டுள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது சுமார் 44 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.

8,659 கோடி பணப்பரிவர்த்தனை! பணத்தை விட்டு UPI-ஐ நாடும் மக்கள்!  UPI பரிவர்த்தனை வளர்ச்சி கிடுகிடு!

"2024 முதல் 2025-ஆம் நிதியாண்டின் கடந்த 5 மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) பரிவர்த்தனை அளவு 8,659 கோடியை எட்டியுள்ளது. பரிவர்த்தனைகளின் மதிப்பு 11% CAGR மதிப்பில் ரூ.1,962 லட்சம் கோடியிலிருந்து ரூ.3,659 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கூடுதலாக, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் மொத்த பரிவர்த்தனை மதிப்பு 1,669 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சேவையின் முன்னோடியாக UPI உள்ளது என்பதையும் அமைச்சகம் தெரிவித்தது. 2017 முதல் 2018-ஆம் நிதியாண்டில் 92 கோடியாக இருந்த UPI பரிவர்த்தனைகள் 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் 13,116 கோடியாக, சுமார் 129% CAGR அதிகரித்து, நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட்டுகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பான மற்றும் தடையற்ற வகையில் பணம் செலுத்த உதவுவதனாலும் மக்கள் அதிக அளவில் தற்போது UPI தளங்களைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மற்ற நாடுகளிலும் இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் விரிவாகத் தொடங்கியுள்ளது. UPI மற்றும் RuPay இரண்டும் உலகளவில் வேகமாக விரிவடைந்து வருவதாகவும், வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​UPI ஆனது UAE, சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ் மற்றும் மொரிஷியஸ் போன்ற 7 முக்கிய நாடுகளில் பயன்படுகிறது. இந்திய நுகர்வோர் மற்றும் வணிகங்கள் சர்வதேச அளவில் பணம் செலுத்தவும் பெறவும் அனுமதிக்கிறது. நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த விரிவாக்கம் பணப்பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்தி இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+