UPI பரிமாற்றத்திற்கு கட்டணமா? எதற்கு, எங்கெல்லாம், யாரெல்லாம் செலுத்த வேண்டும்? - முழு விபரம்

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில், நேஷ்னல் பேமெண்ட் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா அமைப்பு ப்ரீபெய்டு பேமெண்ட் இண்ஸ்ட்ரூமென்ட் அதாவது பேமெண்ட் தளத்தில் இருக்கும் வேலெட், ஸ்மார்ட் கார்டு போன்றவற்றில் இருந்து யூபிஐ தளத்தின் வாயிலாக பேமெண்ட் செலுத்தும் போது, அதற்கு Interchange கட்டணமாக பேமெண்ட் தொகையில் சுமார் 1.1 சதவீதம் வரையில் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Recommended Video

UPI Transaction Charges எதுக்கு? எவ்வளவு? | UPI Transaction Charges From April 2023 in Tamil

இந்த Interchange கட்டணம் என்பது அனைத்து பேமெண்ட்களுக்கும், அனைத்து இடங்களுக்கும் ஓரே மாதிரியாக வசூலிக்கப்படுமா என்றால் கட்டாயம் இல்லை. இடம், சேவைக்கு பொருத்து 0.5 சதவீதம் வரையில் இருந்து 1.1 சதவீதம் வரையிலான கட்டணத்தை merchant category code அடிப்படையில் வசூலிக்கப்படும்.

இதைவிட முக்கியமாக, இந்த Interchange கட்டணம் 2000 ரூபாய்க்கு அதிகமாக தொகையை பேமெண்ட் செய்யும் போது மட்டுமே வசூலிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய விதி

புதிய விதி

NPCI அமைப்பின் புதிய வழிக்காட்டுதல் படி வேலெட் பயன்படுத்துவதற்காக வசூலிக்கப்படும் Interchange கட்டணம், விற்பனையாளர்களிடம் இருந்து வேலெட் சேவை வழங்கும் பேடிஎம், போன்பே, கூகுள்பே போன்ற நிறுவனங்களுக்கு செல்லும்.

வேலெட்

வேலெட்

இது மட்டும் அல்லாமல் இந்த பேடிஎம், போன்பே, கூகுள்பே நிறுவனங்கள் தங்களுடைய வேலெட்-ல் பணத்தை Add செய்யும் போதும் 2000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு 0.15 சதவீதம் கட்டணத்தை, பணத்தை பெறும் வங்கிக்கு செலுத்தப்படும்.

அதாவது வேலெட் உரிமையாளரின் வங்கி கணக்கு உள்ள வங்கிக்கு செலுத்த வேண்டும். இந்த 0.15 சதவீதம் கட்டணத்தை வேலெட் சேவை அளிக்கும் நிறுவனம் வங்கிக்கு செலுத்த வேண்டும், இதனால் இப்போதைக்கு மக்களுக்கு எவ்விதமான சுமையும் இல்லை.

UPI சேவை

UPI சேவை

இப்புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், UPI சேவையை பயன்படுத்தி ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பும் போது எவ்விதமான கட்டணமும் இல்லை. இதற்கு கட்டணத்தை விதிக்கவும் மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளது.

எதற்காக வேலெட்

எதற்காக வேலெட்

டிஜிட்டல் லேலெட் பல வகையில் பேமெண்ட் செலுத்த வசதியாக உள்ளது, குறிப்பாக பல்வேறு டிஜிட்டல் தளங்களில் சேவை பெரும் போதும், பொருட்களை வாங்குவதற்காக தொகையை செலுத்தும் போதும் வேலெட் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வேலெட் சேவை Buy Now Pay Later சேவை பயன்படுத்த பெரும் உதவியாக உள்ளது. வேலெட்-ல் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கி வாயிலாக பணத்தை லோடு செய்ய முடியும்.

யார் செலுத்த வேண்டும்

யார் செலுத்த வேண்டும்

பேடிஎம், போன்பே, கூகுள்பே நிறுவனங்கள் தங்களுடைய வேலெட்-ல் பணத்தை Add செய்யும் போதும் கட்டணத்தை வசூலிக்கும். இந்த கட்டணத்தை பணத்தை பெறும் வங்கிக்கு செலுத்தப்படும்.

இதேபோல் 2000 ரூபாய்க்கு அதிகமாக பணத்தை வேலெட்-ல் இருந்து செலுத்தும் போது வசூலிக்கப்படும் கட்டணம் விற்பனையாளர்களிடம் இருந்து வேலெட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் வசூலிக்கும்.

பிரச்சனையில்லை

பிரச்சனையில்லை

இந்த Interchange கட்டணம் 2000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு மட்டுமே வசூலிக்கப்படும் என்பதால் சிறு, குறு விற்பனையாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு பாதிப்பு இருக்காது.

ஆனால் இப்பிரிவு வியாபாரிகளும் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணத்தை பெறும் சேவையை கொண்டு வரும் பட்சத்தில் இந்த பிரச்சனையே இருக்காது.

எதற்கு எவ்வளவு கட்டணம்

எதற்கு எவ்வளவு கட்டணம்

மளிகை மற்றும் பிற கடைகள் - 1.1 சதவீதம் Interchange கட்டணம்

அரசு சேவைகள், மியூச்சவல் பண்ட், இன்சூரன்ஸ், ரயில்வே, POS மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு - 1.0 சதவீதம் கட்டணம்

சூப்பர்மார்கெட் - 0.9 சதவீதம்

டெலிகாம், போஸ்ட் ஆபீஸ், யூடிலிட்டீஸ், கல்வி, விவசாயம், ரியல் எஸ்டேட் - 0.7 சதவீதம்

எரிபொருள் - 0.5 சதவீதம்

 பேடிஎம் விளக்கம்

பேடிஎம் விளக்கம்

இப்புதிய விதிகள் மூலம் மக்கள் UPI வாயிலாக லேலெட் மூலம் பேமெண்ட் செலுத்தினாலும், வங்கிகள் மத்தியிலான பேமெண்ட் செலுத்தினாலும் எவ்விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.

தற்போது கட்டண வசூலிப்பு அனைத்தும் விற்பனையாளர் - வேலெட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் - வங்கிகள் மத்தியில் தான். இந்த கட்டமைப்பில் கஸ்டமர்-க்கு எந்த சுமையும் இல்லை.

பிரச்சனை இங்கு தான் உருவாகும்..

பிரச்சனை இங்கு தான் உருவாகும்..

ஆனால் 2000 ரூபாய்க்கு தொகைக்கான சேவை கட்டணத்தை விற்பனையாளர், வாடிக்கையாளரை கூடுதலாக செலுத்த கூறினால் மக்களுக்கு தான் சுமை. UPI வருவதற்கு முன்பு டெபிட் கார்டு பயன்படுத்தும் போது பல இடத்தில் சேவை கட்டணத்தை வாடிக்கையாளரிடம் விற்பனையாளர் வாங்குவது நடந்து வந்தது. இதேபோன்ற நிகழ்வு தற்போது யூபிஐ சேவை பிரிவிலும் வர வாய்ப்பு உள்ளது.

அதாவது 2500 ரூபாய்க்கு மளிகை பொருட்களை வாங்கினால் விற்பனையாளர் வேலெட் சேவையை பயன்படுத்தும் காரணத்தால் 1.1 சதவீத கட்டணமான 27.5 ரூபாயை சேர்த்து 2527.5 ரூபாய் செலுத்த நிர்பந்தம் செய்யலாம்.

இதேபோல் வேலெட்-ல் பணத்தை Add செய்யும் போதும் 2000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு 0.15 சதவீதம் கட்டண சுமையை வேலெட் சேவை அளிக்கும் நிறுவனம் மக்கள் மீது திணிக்கவும் வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+