எல்லாம் இந்த கொரோனாவால் வந்த வினை. நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளூக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறதே தவிர, இன்னும் குறைந்தபாடு இல்லை. இது இப்படி ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது எனில், மறுபுறம் வேலையின்மை என்பது மக்களை பாடாய் படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதமானது நகர்புறங்களில் 9.83% ஆக அதிகரித்துள்ளது. இதுவே கிராமப்புறங்களில் 7.63% ஆகவும் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இந்த கொரோனா தான். ஏனெனில் இந்த காலகட்டத்தில் முறையான பணியமர்த்தல் என்பது மிக குறைவே. அதோடு கிராமப்புறங்களிலும் வேலைவாய்ப்பு தேக்கமடைந்துள்ளது. செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட்ட இந்திய பொருளாதாரத்தினை கண்கானிக்கும் மையமான சிஎம்ஐஇ மாத வேலையின்மை தரவுகளின் படி, ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கடந்த ஜூலை மாதத்தில் 7.43% இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 8.35% ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் நகர்புற மற்றும் கிராமப்புற வேலையின்மை விகிதம் முறையே ஜூலை மாதத்தில் முறையே 9.15% மற்றும் 6.66% ஆகவும் இருந்தது. ஆனால் இது ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 8.75% ஆகவும், இதே கிராமப்புற வேலையின்மை விகிதம் 8.44% ஆகவும், நகர்புற வேலையின்மை விகிதம் 9.41% ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்த வேலையின்மை விகிதமானது, கொரோனா லாக்டவுனுக்கு முன்பு, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இருந்ததைவிட தற்போது அதிகரித்துள்ளது.
இந்த லிஸ்டில் வழக்கம்போல ஹரியானா மிக மோசமாக பாதிக்கப்பட்ட, அங்கு வேலையின்மை விகிதம் 33.5% ஆகவும், அதனையடுத்து திரிபுராவில் 27.9% ஆகவும், ராஜஸ்தானில் 17.5% ஆகவும் அதிகரித்துள்ளது.
இதே கர்நாடகா தான் இந்த லிஸ்டில் குறைந்த வேலையின்மை விகிதத்தினை பதிவு செய்துள்ளது. அது 0.5% ஆகும். இதற்கு அடுத்து ஒடிசா 1.4%மும், குஜராத் 1.9% ஆகவும் வேலையின்மை விகிதத்தினை பதிவு செய்துள்ளன.
எனினும் இது அடுத்து வரும் மாதங்களில் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக இது வாய்ப்பாக அமையும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications