மத்திய அரசு, ஐபோன் மற்றும் ஐபாட் பயன்படுத்தும் மக்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின் காரணம் ஆப்பிள் நிறுவனத்தின் iOS மற்றும் iPadOS மென்பொருளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் தான். இந்த குறைபாடுகள், ஹேக்கர்கள் உங்கள் சாதனத்தில்(Device) ஊடுருவி முக்கியமான தகவல்களை திருடவும், சாதனத்தை வேலை செய்யாத மாதிரியே செய்யவும் வாய்ப்பு அளிக்கின்றன. இதில் முக்கியமாக, டார்வின் அறிவிப்பு அமைப்பில் (Darwin Notification System) உள்ள ஒரு குறைபாடு, அனுமதி இல்லாமல் கூட முக்கியமான கணினி செயல்பாடுகளை நடத்த வழிவகுக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று.
இந்த பிரச்சனை பழைய மற்றும் சில புதிய ஐபோன் மற்றும் ஐபாட் மாடல்களில் உள்ளது. குறிப்பாக iPhone XS மற்றும் அதற்குப் பிறகு வந்த மாடல்கள், iPad Pro (2வது தலைமுறை மற்றும் அதற்கு மேற்பட்டவை), iPad (6வது தலைமுறை மற்றும் மேலே), iPad Air (3வது தலைமுறையிலிருந்து மேலே), iPad Mini (5வது தலைமுறையில் இருந்து மேலே) போன்ற சாதனங்களில் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், iOS 18.3 க்கு முந்தைய பதிப்புகள் மற்றும் iPadOS 17.7.3 க்கு முந்தைய பதிப்புகள் பயன்படுத்தும் சாதனங்கள் இந்த ஆபத்தில் உள்ளன.

இந்த குறைபாடுகளை ஹேக்கர்கள் பயன்படுத்தினால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் (பேஸ்புக், வங்கிக் கணக்கு, மெயில் போன்றவை) திருடப்படலாம், சாதனம் தானாகவே செயலில் இருந்து நிறுத்தப்படலாம், பாதுகாப்பு முறைகள் மீறப்படலாம், உங்கள் சாதனத்தில் நீங்கள் அனுமதி அளிக்காத செயலிகள் ஓடலாம், உங்கள் சாதனம் முற்றிலும் வேலை செய்யாததாக மாறலாம் என அரசின் CERT-In (Computer Emergency Response Team - India) தெரிவிக்கின்றது.
இந்த பாதிப்புகள் உண்மையில் உலகின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுவதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனால், இது ஒரு சின்ன விஷயம் அல்ல மிக முக்கியமான விஷயம். இந்த ஆபத்தைத் தவிர்க்க, மத்திய அரசு மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் கீழ்கண்ட முக்கியமான ஆலோசனைகளை வழங்குகின்றன. உங்கள் ஐபோன் அல்லது ஐபாட் சாதனத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். iOS மற்றும் iPadOS மென்பொருளின் புதிய பதிப்பை நிறுவுங்கள். இது பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யும்.
புதிய செயலிகள் நிறுவும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாத செயலிகளை இந்நேரம் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். சாதனத்தில் அசாதாரணமான மாற்றங்களை கவனிக்க வேண்டும். உதாரணமாக, சாதனம் தானாக செயல்படுவது, புதிய செயலிகள் தானாகவே நிறுவப்படுவது போன்றவை நடந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கமாக மென்பொருள் புதுப்பிப்புகளை செய்யுங்கள். இது உங்கள் சாதனத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications