அமெரிக்கா புதன்கிழமை முதல் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை நடைமுறைப்படுத்தியுள்ளது. ரஷ்ய எண்ணெய் தொடர்பாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை திரும்ப பெறும் அல்லது சீனாவுக்கு அளிக்கப்பட்ட 90 நாள் காலக்கெடுப் போல் இந்தியாவுக்கும் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்க அரசு திட்டமிட்டப்படி 50 சதவீத வரியை நடைமுறைப்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்பு இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது. இந்த வரி விதிப்பு மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் 48.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 நிதியாண்டில் அமெரிக்காவுக்கு இந்தியா 86 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அமெரிக்கா ஸ்மார்ட்போன், பார்மா, ஆட்டோமொபைல், உலோகம், பெட்ரோலியம் பொருட்களுக்கு வரி விலக்கு கொடுத்துள்ள காரணத்தால் 48.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் பாதிக்கப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்புகள் மூலம் தொழிலாளர் அதிகம் சார்ந்த தொழில்துறைகளை கட்டம்கட்டி பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதால் அடுத்த சில மாதத்தில் பல லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடலாம் என கணிப்புகளும் நிலவுகிறது. இந்த வரி விதிப்பால் டெக்ஸ்டைல், இறால், தோல், நகைகள் உள்ளிட்ட துறைகள் அதிகப்படியான வர்த்தக இழப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறால் போன்ற கடல் உணவு துறையில், அமெரிக்காவின் மொத்த இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியா 40 சதவீத பங்கீட்டை கொண்டுள்ளது. இந்த வரி உயர்வால் இறால் மற்றும் கடல் சார் உணவு பொருட்கள் துறையில் இருக்கும் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் தற்போது இத்துறை நிறுவனங்கள் வைத்திருக்கும் இருப்புகள் பாதிக்கும்.
மத்திய அரசின் முயற்சி
இந்த நிலையில் மத்திய அரசு, அமெரிக்காவிந் 50 சதவீத வரி தாக்கத்தை குறைக்க பல்முனை உத்தியை வகுத்து வருகிறது. வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தை தயாரித்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வரி மூலம் பாதிக்கப்பட்ட துறைக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நிதி வாயிலாகவும், கொள்கை வாயிலாகவும், வரி விதிப்பு வாயிலாகவும் உதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் ஏற்றுமதி வர்த்தகத்தால் பாதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் மாற்று சந்தையை கண்டிப்பிடித்தால் போதும், வருவாய் பாதிப்பில் இருந்து வெளியேற மத்திய அரசு திட்டத்தை தயாரித்து வருகிறது. கொரோனா காலத்தில் துவண்டுபோன வர்த்தகத்தை இதேபோல் ஊக்க திட்டத்தின் வாயிலாக தான் மீட்டு எடுத்தது. இதேபோன்ற முயற்சியை தற்போது மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
மேலும் மத்திய அரசு அமெரிக்காவின் வரி விதிப்பில் எந்தவிதமான பதிலடி நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பியூஷ் கோயல் கருத்து
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஈடி பத்திரிக்கையுடன் பேசுகளில் இந்தியாவுக்கு அமெரிக்காவுடனான உறவு மிக முக்கியமானது எனக் கூறினார். ஆனால், தேசிய நலன்களே முதன்மையானது என வலியுறுத்தினார்.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications