அமெரிக்கா அறிவித்துள்ள 50 சதவீத வரி உயர்வு, இந்தியாவின் ஏற்றுமதி துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளதாக சந்தை கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த 50 சதவீத வரி உயர்வு ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், இந்திய சந்தை எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் சேவைத்துறை அடிப்படையிலேயே இருந்தது, ஆனால் கடந்த 10 வருடத்தில் மத்திய மாநில அரசுகளின் முயற்சிகளால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறி வருகிறது. குறிப்பாக சீனா + ஒன் முயற்சிகள் மூலம் இந்திய பெரிய அளவில் பலன் பெற்றது.

இந்த மாற்றத்தின் மூலம் இந்தியா வேகமாக வளரும் உற்பத்தி நாடாக மாறியது, இதேபோல் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவை முக்கிய சந்தையாக கொண்டு செயல்ப்பட்டு வந்தது. இத்தகைய சூழ்நிலையில் டிரம்ப்-ன் 50 சதவீத வரி இந்திய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் ஆகஸ்ட் 27க்குள் எந்த அளவுக்கு அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியுமோ ஏற்றுமதி செய்து வருகிறது, இது அடுத்த சில மாதங்களுக்கு நிதி புழக்கத்தை கொடுத்தாலும் நிரந்தர தீர்வாக இருக்காது என்பதே நிதர்சனமான உண்மை.
டிரம்ப்-ன் 50 சதவீத வரி இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களில் சுமார் 48.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் மீது விதிக்கப்படும், இதனால் இதன் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 48.2 பில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4.18 லட்சம் கோடியாகும். இந்த கணக்கீட்டை 2024 ஆம் ஆண்டின் இந்தியா - அமெரிக்க வர்த்தகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான வணிகத்தில் இந்தியா பெரும் அளவு ஏற்றுமதி செய்யும் நாடாக இருப்பதால், ரெசிப்ரோக்கல் வரியாக 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார், இதை தொடர்ந்து ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் புடின் அரசு உக்ரைன் மீது போர் தொடுக்கிறது என காரணம் காட்டில் கூடுதலாக25 சதவீத வரியை விதித்தார் டிரம்ப். இப்படி இந்திய பொருட்கள் மீது மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜதின் பிரசாதா அமெரிக்காவின் வரி மூலம் 48.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது வரி விதிப்பு இருக்கும், இதனால் இந்த சரக்குகளின் வர்த்தகம் பாதிக்கப்படும் கணக்கிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன்களைப் பாதுகாக்கவும் உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.
இந்த வரி உயர்வின் தாக்கத்தை குறைக்க, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டங்கள் மற்றும் வணிகத்தை பிற நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் போன்ற அனைத்து தேவையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதன் மூலம், வணிகத்தில் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க அரசு திட்டமிட்டு வருவது உறுதியாகியுள்ளது.
இந்த சூழலில், அமெரிக்காவின் வர்த்தக அமைப்பு அதிகாரிகள் இந்தியாவுக்கு வரவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான இந்த குழு, ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரவிருந்தது. இது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த ஆறாவது சுற்று பேச்சுவார்த்தையாக இருந்தது.
அமெரிக்கா - இந்தியா மத்தியிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து இதுவரை ஐந்து சுற்று பேச்சுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆறாவது சுற்று மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது வரி உயர்வு அமலுக்கு வரும் நேரத்தில் நடைபெறவிருந்தது. தற்போது இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் புதிய தேதி முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் டிரம்ப் - புடின் மத்தியிலான சந்திப்பு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்க அரசு இந்தியா மீது மட்டுமே வரி விதித்துள்ளது, ஆனால் சீனா மீது விதிக்கவில்லை. இந்த நிலையில் புடின் சந்திப்பிற்கு பின்பு டிரம்ப் வரி விதிப்பு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படலாம் என தெரிவித்தார். இதனால் இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதலான 25 சதவீத வரி கடைசி நேரத்தில் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
More From GoodReturns

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications