அமெரிக்காவின் புதிய 50 சதவீத வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதி துறைகள் பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்களின் வர்த்தகம் குறைந்து, லாப அளவுகள் குறைந்து, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை மூலம் இதை தீர்க்க வேண்டும் என்றும் முதல்வர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இக்கடிதத்தில் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் தினசரி ரூ.60 கோடி வருவாய் இழப்பை சந்திக்கின்றனர் என்றும் இதன் முலம் பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மூடும் நிலைக்கு தள்ளியுள்ளது. அமெரிக்காவின் வரியால் ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக திருப்பூரில் ஒப்புதல் கொடுக்கப்பட்ட ரூ.15,000 கோடி ஆர்டர்கள் ரத்தாகியுள்ளன. இதனால் உற்பத்தி 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய ஆர்டர்கள் வருவதும் குறைந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் லாபத்தை விட்டுக்கொடுத்து தள்ளுபடி விலை தர வேண்டிய நிலை உள்ளது என பிரச்சனையை விவரித்தார்.
இந்தியாவின் டெக்ஸ்டைல் மற்றும் ஆடை ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 28 சதவீத பங்கு வகிக்கிறது. இத்துறையில் மட்டும் சுமார் 75 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதேபோல் தோல் மற்றும் காலணியின் மொத்த இந்திய ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 40 சதவீத உள்ளது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
அமெரிக்க வரி உயர்வு இந்த துறைகளை பெரிதும் பாதிக்கிறது. இது பொருளாதார இழப்பு மட்டுமல்ல, ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் பிரச்சினையாக உள்ளது என ஸ்டாலின் அவர்கள் கடிதம் வாயிலாக மோடிக்கு தெரிவித்துள்ளார்.
டெக்ஸ்டைல் துறையில் ஏற்பட்ட பாதிப்பு எப்படி திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை பாதிக்கிறதோ, அதேபோல் தோல் மற்றும் காலணி துறையில் ஏற்பட்ட பாதிப்பு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இதே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்றுமதியாளர்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க தள்ளுபடி தர வேண்டிய நிலை உருவாகியுள்ளது, இதனால் லாப அளவுகள் பெரிய அளவில் குறைந்து வருகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications