கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவுக்கு புதிய அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. ரஷ்யா - உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக பொருளாதார இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் ரஷ்யா அரசு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணையை விற்பனை செய்கிறது.

இந்தியாவை சேர்ந்த அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கின. அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு மறைமுகமாக இந்தியா உதவி செய்கிறது என குற்றம் சாட்டினார். இதற்கு தண்டனையாக இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.

கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவுக்கு புதிய அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா!!

அந்த வகையில் தற்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஏற்றுமதி துறை சார்ந்து இயங்கக்கூடிய நிறுவனங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நஷ்டத்திற்கு தொழில் புரிய வேண்டிய சூழலுக்கு ஆளாகி இருப்பதாக ஜவுளி மற்றும் தோல் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் படிப்படியாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா கச்சா எண்ணெய் விவகாரத்தில் புதிய ஒரு அழுத்தத்தை இந்தியாவிற்கு தந்திருக்கிறதாம். அண்மையில் தான் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்தது. வெனிசுலாவில் இருக்கும் கச்சா எண்ணெய் வளங்களை கையகப்படுத்தும் நோக்கத்தில் தான் டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டு வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா ஏற்கனவே வெனிசுலாவிடம் இருந்து தான் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஆனால் அமெரிக்கா- வெனிசுலா இடையே ஏற்பட்ட மோதல், வெனிசுலா மீது விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக இந்தியா வெனிசுலா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தி கொண்டது.

இந்த சூழலில் தான் தற்போது மீண்டும் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் படி அமெரிக்கா மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி குறிப்பிடுகிறது. இதற்கிடையே வெனிசுலா நாட்டு இடைக்கால அதிபர் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசி இருக்கின்றனர்.

அதில் இரு நாட்டு உறவுகளை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வையோடு அனைத்து துறைகளிலும் இரு தரப்பு கூட்டான்மையை மேலும் ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம் என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+