அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்கு பின்பு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தில் இருந்து பின்வாங்கும் என்றும், ஜனநாயக கட்சி மீண்டும் தாக்குதலுக்கு இடம் கொடுத்தாது என கூறப்படும் இதேவேளையில், அமெகிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் திட்டமிட்டு வரும் புதிய தாக்குதலில் ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் மொத்தமாக குறிவைத்து அழிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டிரம்ப் நிர்வாகத்தில் மார்கோ ரூபியோ வெளியேற திட்டமிட்டு வருவதாகவும், பீட் செகத் வெளியேற்றப்பட திட்டமிடுப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வரும் வேளையில் டிரம்ப் ஈரான் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

இந்த புதிய தாக்குதலில் எரிசக்தி கட்டமைப்புகள், அணுசக்தி நிலையங்கள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் ட்ரோன் ஆயுதக் கிடங்குகளை மட்டும் குறிவைத்து குறுகிய கால + தீவிரமான தாக்குதலை நடத்த இஸ்ரேலும் அமெரிக்காவும் திட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதேபோல் ஈரான் மீது அமெரிக்கா முழு அளவிலான போரை துவங்கி தயாராகி வருவதாக ஆக்சியோஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் ஈரானும் அமெரிக்காவின் அடுத்த பெரிய தாக்குத்தல்களை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்காவின் CENTCOM கட்டுப்பாட்டில் செயல்படும் படைகள் நடத்தும் தாக்குதல்கள் மூலம் எப்படி அதிக உயிரிழப்பு ஏற்படாமல் பாதுகாப்பது என்பதற்கான ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மிட்டேர்ம் தேர்தல் முடிவுகளுக்கு பின்பு டிரம்ப் பேசுகையில் ஈரான் மீதான தாக்குதலை துவங்குவதில் எப்போது எவ்விதமான திட்டமும் இல்லை என தெரிவித்தது மட்டும் அல்லாமல், குடியரசு கட்சியின் தோல்விக்கு ஈரான் மீது போர் செய்தது தான் காரணம் எனவும் பேசியனார்.
ஆனால் இன்கு டிரம்ப் உயர்மட்ட தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு தாக்குதலுக்கான அமெரிக்காவின் தயாரிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இந்த திடீர் பதற்றம் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.68 சதவீதம் உயர்ந்து 99.94 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் 1.27 சதவீதம் உயர்ந்து 91.67 டாலராகவும் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications