ஈரானிலிருந்து வந்த செய்தி.. அஞ்சி நடுங்கும் இஸ்ரேல்.. போருக்குத் தயாரான அமெரிக்கா..!!

அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான போர் பிப்ரவரி மாதத்திற்குப் பின்பு மீண்டும் மிகப்பெரியதாக வெடிக்கக் காத்திருக்கும் வேளையில். ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் நாடேரி வெளியிட்ட கருத்து இஸ்ரேல் அரசின் தூக்கத்தைத் தொலைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அமரிக்காக, இஸ்ரேல் ராணுவப் படைகள் ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்தத் தனது படைகளைத் திரட்டி வருகிறது. இந்நிலையில் ஈரான் அணு ஆயுத திட்டத்தின் நிலைப்பாடு என்பது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது என்றால் மிகையில்லை.

ஈரானிலிருந்து வந்த செய்தி.. அஞ்சி நடுங்கும் இஸ்ரேல்.. போருக்குத் தயாரான அமெரிக்கா..!!

சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் அணு ஆயுத திட்டம் குறித்துப் பேசுகையில், ஈரான் நாட்டின் உச்சத் தலைவரான முஜ்தபா கமேனி அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு அந்நாட்டின் அரசு முன்பு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்கிவிட்டு, மீண்டும் அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

இதேவேளையில் போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க அரசு ஈரானிடம் அணுசக்தி திட்டம் குறித்து ஒவ்வொரு முறையும் பேசும் போது, ஈரான் தரப்பில் வைக்கப்பட்ட 7 முக்கிய கோரிக்கைகளை மொத்தமாக நிறைவேற்றிய பின்பு தான் அணுசக்தி திட்டம் குறித்துப் பேச முடியும் என தெரிவித்துள்ளது.

Also Read

பெஞ்சமின் நெதன்யாகு இத்தகைய கருத்தை முன்வைக்க முக்கிய காரணம் ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் நாடேரி வெளியிட்ட கருத்து தான், கடந்த வாரம் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அணு ஆயுதங்கள் தொடர்பாக முஜ்தபா கமேனி அவர்களின் நிலைப்பாடு என்பது நாட்டின் முன்னாள் தலைவரும், அவரது தந்தையுமான அயத்துல்லா அலி கமெனியின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் ஈரான் தற்போது எதிர்கொண்டு வரும் சூழ்நிலையில் ஈரானுக்கு அணு ஆயுதங்களைப் பெறுவது அவசியம் என்றும் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் நெதன்யாகு ஈரான் மீண்டும் அணு ஆயுதம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

ஈரான் அணு ஆயுத செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் IDF, Mossad, இதர பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார் பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேலுக்கான அணு ஆயுத அச்சத்தைப் போக்க ஈரான் அரசை கவிழ்ப்பது தான் ஒரே வழி எனவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்தத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று அமெரிக்க அரசு தரப்பில் வெளியிடப்பட்ட தகவில் அமெரிக்க அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், விரைவில் மிகப்பெரிய தாக்குதல் ஈரான் மீது நடத்தப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், பலர் மிட்டேர்ம் தாக்குதல் பின்பு தான் அமெரிக்க ஈரானைத் தாக்கும் என நினைக்கிறார்கள் என டிரம்ப் பேசினார். இதனால் தாக்குதல் முன்கூட்டியே நடக்க வாய்ப்புகள் அதிகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+