ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்தி இருக்கும் வான்வழி தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என்ற அச்சத்தையும் உண்டாக்கி உள்ளது.
உயரும் கச்சா எண்ணெய் விலை: கடந்த ஒரு வார காலமாக இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் குதித்து இருக்கிறது . ஈரானுக்கு சொந்தமான மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தி இருக்கிறது. இது கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு தான் வழிவகை செய்யும். ஏற்கனவே கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வரும் மோதலால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 79 டாலர்கள் வரை உயர்ந்தது. பிரெண்ட் கச்சா ஃபியூச்சர்ஸ் 18 சதவீதம் அதிகரித்தது.

ஹோர்முஸ் நீரிணை: வார இறுதியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 77 டாலர்கள் என்ற அளவிலும் வெஸ்ட் டெக்ஸாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை 75 டாலர்கள் என்ற அளவிலும் இருந்தன. இந்த சூழலில்தான் அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலை தொடுத்து இருக்கிறது. இதனால் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே இந்த பகுதியில் இயங்கக்கூடிய டேங்கர் கப்பல்களின் கட்டணங்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறதாம். போர் அச்சம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய கப்பல்களை வேறு பாதைகளில் இயக்கி வருகின்றன . இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவுக்கு பாதிப்பு: ஹோர்முஸ் நீரிணையில் ஏதேனும் பிரச்சனை உண்டாகினால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர்கள் வரை உயரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கச்சா விலை உயர்வது இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இந்தியா தன்னுடைய பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிவாயுக்களுக்கு முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து பயன்படுத்துகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும். இது பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பெரிய ஆபத்து: முன்னதாக ஜேபி மார்ன், சிட்டி பேங்க் உள்ளிட்ட சர்வதேச வங்கிகளும், ஆய்வு நிறுவனங்களும் வெளியிட்ட அறிக்கையில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலோ அல்லது அந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டாலோ கச்சா எண்ணெய் விலை ஒரு பேரில் 120 டாலரில் இருந்து 130 டாலர்கள் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தன. ஈரான் மீதான இந்த போர் நீண்ட காலம் தொடர்ந்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயரும் என்றும் கூறி இருந்தன.
தங்கம் விலை உயரும்:இந்த போர் பதற்றம் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி நகரச் செய்யும், இது தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணமாக அமையும். திங்கட்கிழமை அன்று பங்குச்சந்தைகளில் இந்த தாக்கம் மிக வலுவாக எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
More From GoodReturns

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!



Click it and Unblock the Notifications