டெஸ்லா-வை தூக்கிவிட டிரம்ப் கொண்டு வந்தது தானா இந்த 25% வரி..? ஷாக் கொடுக்கும் தகவல்..!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள ஆட்டோமொபைல் இறக்குமதிக்கான 25 சதவீத வரி விதிப்பு, சர்வதேச வாகன சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கையால், டெஸ்லா நிறுவனம் பெரிய அளவில் பலன் அடையப்போகிறது என தெரிகிறது.

எலான் மஸ்கின் தலைமையின் கீழ் செயல்படும் டெஸ்லா, அமெரிக்க அரசோடும், அதிபர் டொனால்டு டிரம்ப் உடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளார். டிரம்ப் பதவியேற்றிய நாளில் இருந்து அதிகப்படியான பங்கு மதிப்பை இழந்த முன்னணி அமெரிக்க நிறுவனங்களும் ஒன்றாக உள்ளது. இப்படியிருக்கும் வேளையில் டெஸ்லா-வை ஆதரிப்பது போல் டிரம்ப் தனக்காக ஒரு டெஸ்லா காரை வாங்குவதாக அறிவித்தார். அதன் பின்பு டெஸ்லா கார்களை எரிக்கப்பட்ட போது டிரம்ப் நேரடியாக எச்சரித்தார். இதன் பின்பு தற்போது வரியை விதித்துள்ளார்.

டெஸ்லா-வை தூக்கிவிட டிரம்ப் கொண்டு வந்தது தானா இந்த 25% வரி..? ஷாக் கொடுக்கும் தகவல்..!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வெளிநாட்டு வாகனங்கள் மீதும் அதாவது முழுமையாக உருவாக்கப்பட்ட கார்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு ஏப்ரல் 3ஆம் தேதியில் இருந்தும், அமெரிக்க மண்ணில் இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத வரி அடுத்த ஒரு மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

சரி இந்த வரி விதிப்பு எப்படி எலான் மஸ்க்கிற்கு சாதகமாக அமையும், பெரிய கணக்கே இதில் இருக்கு. கடந்த 10 வருடத்தில் அமெரிக்க சந்தையில் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஆதிக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதை மீட்டு எடுக்கும் நோக்குடனும், அமெரிக்க அரசுக்கு வரி வருமானம் அதிகரிக்கும் திட்டத்துடன் தான் இந்த 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் வாகனங்களை விற்கும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் வாகனங்களையும், வாகனங்களுக்கான உதிரிபாகங்களையும் அதிகப்படியாக வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதற்கு 25 சதவீதம் வரி விதிக்கும் போது 100 பில்லியன் டாலர் வரையில் கூடுதல் வரி வருமானம் ஈட்ட முடியும் என்பது டிரம்ப் கணக்கு. ஆனால் இதற்கு பின்னால் மற்றொரு கணக்கு எலான் மஸ்க் போட்டு உள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்பு ஆலைகள் கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் மட்டுமே அமைந்துள்ளன. இதேபோல் டெஸ்லா கார்களுக்கான பேட்டரி முதல் உதிரிபாகங்கள் வரையில் அனைத்தும் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி வரி டெஸ்லா கார்களை பாதிக்காது.

டெஸ்லாவின் மாடல் Y SUV மற்றும் மாடல் 3 செடான் கார்கள், கடந்த ஆண்டு அமெரிக்காவில் அதிகம் விற்பனையான மின்சார வாகனங்களாக இருந்தன. இருப்பினும், சந்தை பங்கில் டெஸ்லா படிப்படியாக குறைந்து வருகிறது. இப்படியிருக்கும் வேளையில் 25% இறக்குமதி வரி விதிப்பால், அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான கார்களின் விலை உயரும்.

ஆனால் டெஸ்லா கார்களின் விலை உயராது காரணம், முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படுகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில், மற்ற கார்களின் தற்போதைய சந்தை விலையை காட்டிலும் 12,500 டாலர் வரையில் உயரும் என கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில், டெஸ்லா கார்கள் மட்டும் அதேவிலையில் இருக்கும். இதன் மூலம் அடுத்த மாதம் முதல் டெஸ்லாவின் விற்பனை ராக்கெட் வேகத்தில் உயரப்போகிறது. இதன் மூலம் டெஸ்லா பங்குகளும் உயரும், எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பும் உயரும்.

சரி இந்த வரி விதிப்பால் யாருக்கெல்லாம் நன்மை, யாருக்கெல்லாம் நஷ்டம் என்பதை இப்போது பார்ப்போம். டெஸ்லா, முழுமையாக அமெரிக்காவில் உற்பத்தி செய்வதால், இறக்குமதி வரியிலிருந்து விலக்கு பெறுகிறது. இதனால், BMW i4 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 6 போன்ற வெளிநாட்டு மின்சார வாகனங்களுடன் ஒப்பிடும்போது, டெஸ்லாவுக்கு விலை குறைவாக இருக்கும் போதும் இது சாதகமாக அமையும்.

ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு போன்ற அமெரிக்க நிறுவனங்களும், அமெரிக்காவில் பெரிய உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது, சிறிய அளவிலான பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்கிறது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களை காட்டிலும் குறைவான விலையிலேயே கார்களை விற்க முடியும். அதிக லாபம் கிடைக்கும்.

ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் ஐரோப்பாவில் தலைமையகம் கொண்டிருந்தாலும், ஜீப், ராம் மற்றும் டாட்ஜ் போன்ற முக்கிய மாடல்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்வதால், வரி விதிப்பின் தாக்கத்தை குறைக்க முடியும்.

மேலும், அமெரிக்காவில் உள்ள வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களான டானா இன்க், போர்க்வார்னர் மற்றும் அமெரிக்கன் ஆக்சில் போன்ற நிறுவனங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் (OEM) உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவிற்கு மாற்றும் சூழலில், இப்பிரிவு நிறுவனங்கள் வளர்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல், புதிய கார்களின் விலை உயர்வால், பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் கார்மேக்ஸ் போன்ற நிறுவனங்களின் வர்த்தகம், லாபம் அதிகரிக்கும். இதன் மூலம் புதிய கார்களின் விற்பனையை காட்டிலும் பழைய கார்களின் விற்பனை வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

மறுபுறம், மெர்சிடிஸ், வால்வோ மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார் நிறுவனங்கள், அமெரிக்க சந்தையில் இறக்குமதி கார்களை அதிகம் நம்பியிருப்பதால், பெரும் வர்த்தகம், வருவாய் இழப்பை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிறுவனங்கள், இறக்குமதி வரியின் தாக்கத்தை சமாளிக்க, லாப வரம்பை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

ஜப்பான் நாட்டின் டொயோட்டா மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்கள், அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகளை கொண்டிருந்தாலும், லேண்ட் குரூஸர், பிரியஸ் மற்றும் சில CR-V/HR-V மாடல்கள் இறக்குமதி செய்யப்படுவதால், பாதிப்பை சந்திக்க நேரிடும்.

கொரியாவின் ஹூண்டாய் மற்றும் கியா போன்ற நிறுவனங்கள், இறக்குமதியை அதிகம் நம்பியிருப்பதால், ஜெனிசிஸ் G80, ஹூண்டாய் டக்சன் மற்றும் கியா EV6 போன்ற மாடல்களின் விலை அதிகரிக்கும். இறக்குமதி பிராண்டுகளை விற்பனை செய்யும் டீலர்ஷிப்களும் விற்பனை குறைந்து லாப வரம்பு குறையும்.

சுருக்கமாக கூறினால், இறக்குமதி வரி விதிப்பு அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சாதகமாகவும், இறக்குமதியை நம்பியுள்ளவர்களுக்கு பெரும் இழப்பு.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த வரி அறிவிப்பு இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நேரடியாக வாகன ஏற்றுமதி என்பது மிகக் குறைவாக இருந்தாலும், அமெரிக்க ஆட்டோமொபைல் சப்ளை செயினில் இந்திய நிறுவனங்களும் சிறிய பங்கு வகிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+