இந்தியா அந்த முடிவை கைவிடலாம்.. அமெரிக்காவால் ஈரானுக்கு மேலும் பிரச்சனை..!

டெல்லி: சமீப மாதங்களாக ஈரான் அமெரிக்கா இடையேயான பிரச்சனை சுமூக நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்து விட்டது அமெரிக்கா. ஈரானில் இருந்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த, இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்க தடை விதித்துள்ளது.

இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான சுமூக நிலை எட்டப்படுமா? என்ற எண்ணத்தினை உடைத்துள்ளது. இப்போதைக்கு இதற்கு வாய்ப்பு குறைவு என்பதையும் தெளிவுபடுத்திகிறது.

ஈரானுக்கு எதிர்ப்பா?

ஈரானுக்கு எதிர்ப்பா?

அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நிறுவனம் உள்பட சர்வதேச அளவிலான பல நிறுவனங்கள், ஈரானின் டிரைலையன்ஸ் மூலம் மில்லியன் டாலர் மதிப்பிலான மெத்தனால் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தான் அமெரிக்கா இந்த தடை அறிவிப்பினை வெளியிட்டது.

இந்தியாவின் எண்ணம்?

இந்தியாவின் எண்ணம்?

அமெரிக்கா ஈரான் இடையே சுமூக நிலை எட்டப்பட்டால் அது இந்தியாவுக்கு சாதகமாகலாம். இதன் மூலம் இந்தியா மீண்டும் பழையபடி ஈரானிடம் எண்ணெய் வாங்க முற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய நிறுவனம் ஈரானிடம் எண்ணெய் வாங்க நினைத்தாலும் இனி தவிர்க்கலாம். ஏனெனில் இந்தியா மீது அமெரிக்கா தடை விதித்தால் என்னவாகும்? என்ற கேள்விகளுக்கு மத்தியில் இனி இந்தியா தவிர்க்க நினைக்கலாம்.

இனி நடக்குமா?

இனி நடக்குமா?

ஏனெனில் இந்தியா ஈரானுடன் ஈடுபடும் எண்ணெய் வணிகத்தினை விட, இந்தியா அமெரிக்கா இடையேயான வணிக நடவடிக்கைகள் அதிகம். கடந்த செப்டம்பர் 16 அன்று உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை சந்தித்த பின்னர் இந்தியாவின் மறுபரிசீலனைக்கான வாய்ப்பு இருந்தது. ஈரான் இந்தியாவின் சாதகமான அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்தது. ஆனால் இதெல்லாம் இனி நடக்குமா? என்பதும் சந்தேகத்தினை கிளப்பியுள்ளது.

 

 

இறக்குமதி

இறக்குமதி

 

ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி ஏப்ரல் - ஜூலை வரை 414% அதிகரித்து, 13.4 பில்லியன் டாலராக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டில் 11.2 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 773% அதிகரித்துள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையேயான அனுசக்தி ஒப்பந்தம் இனி புதுபிக்கப்படுமா என்பதும் சந்தேகமாகி விட்டது. அதோடு இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியையும் அதிகரித்துள்ள நிலையில், மற்ற நாடுகளின் தடை பிரச்சனையை எதிர்கொள்ளாது எனலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+