ஜப்பானில் நவம்பர் மாத துவக்கத்தில் சுமார் 128 கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கைப் பயன்படுத்த முடியாமல் போனது, வங்கி ஏடிஎம் சேவை முடங்கியது, இன்டர்நெட் பேங்கிங் செயல்படாமல் போனது. இதனால் நவம்பர் 6ஆம் தேதி 3430 வங்கிகள் மொத்தமாக முடங்கி, மேற்கு ஜப்பான் பகுதியில் எவ்விதமான நிதி பரிமாற்றமும் நடக்காமல் பல மணிநேரம் முடங்கியது.
இந்த முடக்கத்திற்குக் காரணமாக இயந்திரங்களுக்கு மத்தியிலான கம்யூனிகேஷன் பாதிப்பு, சில முக்கிய கருவிகள் முடங்கியது தான் காரணம் என விசாரணையில் தெரிய வந்தது.

இதேபோல் இது சைபர் அட்டாக் இல்லை என்பதை ஜப்பான் நிதியியல் துறை வெளிப்படையாக அறிவித்தது. இந்த சம்பவம் நடந்து வெறும் 10 நாளில் நவம்பர் 16ஆம் தேதி அமெரிக்காவில் முன்னணி வங்கிகள் இதேபோல் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான ஜேபி மோர்கன் சேஸ், பேங்க் ஆப் அமெரிக்கா, யூஎஸ் பேங்க், வெல்ஸ் பார்கோ, கேப்பிட்டல் ஓன், Truist, டிஜிட்டல் பேமெண்ட் தளமான Zelle போன்ற பல முன்னணி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கைப் பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.
இதை டெக் கோளாறுகளைக் கண்காணிக்கும் Downdetector-ம் உறுதி செய்துள்ளது. திங்கட்கிழமை அமெரிக்க மக்கள் தங்களுடைய வங்கிக் கணக்கைப் பயன்படுத்த முடியாமலும், பேலென்ஸ் தொகையை செக் செய்ய முடியாமலும், நிதி பரிமாற்றம் செய்ய முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து ஜேபி மோர்கன் சேஸ் வெளியிட்ட அறிக்கையில், சில நிதி பரிமாற்றங்களைச் செயல்படுத்துவதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தாமதம் ஏற்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் பணத்தை எவ்விதமான தடையும் இல்லாமல் பயன்படுத்தினர் எனத் தெரிவித்துள்ளது.
இதேபோல் இது சைபர் அட்டாக் மூலம் நடந்த பாதிப்பு இல்லை என்பதைத் தெரிவித்துள்ளது. மேலும் வங்கி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளைச் சரி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார் ஜேபி மோர்கன் சேஸ் செய்தி தொடர்பாளர்.
ஆனால் ஜேபி மோர்கன் சேஸ் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கைப் பயன்படுத்துவதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டதாகப் பட்டியலிட்டு உள்ளனர். நேற்று அமெரிக்க நேரத்தில் 2 மணிக்கு சுமார் 4800 பேர் ஜேபி மோர்கன் சேஸ் வங்கி சேவையைப் பயன்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளதாக Downdetector தெரிவித்துள்ளது.
இதேபோலவே பேங்க் ஆஃப் அமெரிக்கா, யூஎஸ் பேங்க், வெல்ஸ் பார்கோ, கேப்பிடல் ஓன், Truist வாடிக்கையாளர்களும் பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
சைபர் அட்டாக் இல்லை என வங்கி தரப்பு தெரிவித்திருக்கும் வேளையில், இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜேபி மோர்கன் சேஸ் பங்குகள் நேற்று 2.3 சதவீதம் சரிந்து 338.24 டாலராக வர்த்தகமானது. இதன் மூலம் இந்த வருடம் பதிவு செய்த 5 சதவீத உயர்வில் பாதியை இழந்துள்ளது.


Click it and Unblock the Notifications

