சீனா மக்கள் மத்தியில் வேமாகப் பிரபலமாகி வரும் கிளப்ஹவுஸ் என்ற ஆடியோ சேட்டிங் செயலியைச் சீன அரசு தடை செய்துள்ளது. இதனால் சீனாவில் இருக்கும் இதன் வாடிக்கையாளர்கள் திடீரென இச்செயலியை பயன்படுத்த முடியாமல் போனது.
அமெரிக்காவில் சீன நிறுவனங்களுக்கும், சீன செயலிகளுக்கும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், சீனாவில் பிற அமெரிக்கச் செயலிகள் சந்தித்த அதே பிரச்சனைகளைத் தற்போது கிளப்ஹவுஸ் செயலியும் சந்தித்து உள்ளது. இந்நிறுவனத்தின் இணையத் தளம் இன்னும் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், செயலியை மட்டும் சீன அரசு முடக்கியுள்ளது.
சீனாவின் இண்டர்நெட் விதிகள்
சீனாவின் இண்டர்நெட் விதிகளைக் கிளப்ஹவுஸ் செயலி முழுமையாகப் பூர்த்தி செய்யாத நிலையில், இனி இந்தச் செயலி மீண்டும் மக்களின் பயன்பாட்டு வர வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது. மேலும் சீனா இண்டர்நெட் விதிகளைப் பூர்த்த செய்ய வேண்டுமாயின் இந்தச் செயலி பலவிதமான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என வீசாட் குரூப்-ல் கருத்து நிலவுகிறது.
கிளப்ஹவுஸ் செயலி
ஐபோனில் மட்டுமே இயங்கும் இந்தக் கிளப்ஹவுஸ் செயலி 2020ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் ஆல்பா எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனத்தால் துவங்கப்பட்டது. இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்டுச் சில நாட்களிலேயே சுமார் 24 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதில் ஜனவரி 2021ல் மட்டும் இந்தச் செயலிக்குப் புதிதாகச் சுமார் 13 லட்சம் பேர் வந்துள்ளனர்.
இந்தியாவில் 12,000 பேர்
இந்தியாவில் இந்தச் செயலிக்கு சுமார் 12,000 பேர் வாடிக்கையாளராக உள்ளனர், இதில் பெரும் பகுதி வாடிக்கையாளர்கள் அதாவது சுமார் 8,000 வாடிக்கையாளர்கள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தச் செயலியை டவுன்லோடு செய்துள்ளதாகச் சென்சார் டவர் தெரிவித்துள்ளது.
1 பில்லியன் டாலர் மதிப்பீடு
வெறும் 24 லட்சம் வாடிக்கையாளர்கள் மட்டுமே கொண்டுள்ள இந்தச் செயலி ஐபோன் வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆயினும் உலகம் முழுக்க இந்தச் செயலி பயன்படுத்தப்பட்டு வரும் காரணத்தால் இந்தச் செயலி தற்போது 1 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications