இந்தியாவின் இரண்டாவது பெரிய தங்க கடன் வழங்கும் நிறுவனமான மணப்புரம் பைனான்ஸில் அமெரிக்காவை சேர்ந்த பெயின் கேப்பிடல் (Bain Capital) நிறுவனம் 18 சதவீத பங்கினை வாங்குவது உறுதியாகியுள்ளது.
1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம். 5,357 கிளைகளுடன் சுமார் 51 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு மணப்புரம் பைனான்ஸ் நாடு முழுவதும் இயங்கி வருகிறது. இந்தியாவில் தங்க கடன் வழங்கும் இரண்டாவது பெரிய நிறுவனமாக இது செயல்படுகிறது. கேரளாவை தலைமை இடமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

தங்க கடன் மட்டுமில்லாமல் சிறு கடன்கள், வாகன கடன்கள், வீட்டுக் கடன்கள் உள்ளிட்டவற்றையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் வங்கி சாராத நிதி நிறுவனங்களின் பிரிவின்கீழ் வரக்கூடிய மணப்புரம் பைனான்ஸில் அமெரிக்காவை சேர்ந்த பெயின் கேப்பிட்டல் நிறுவனம் கணிசமான பங்குகளை வாங்குகிறது. பெயின் கேப்பிட்டல் நிறுவனம் 4385 கோடி ரூபாய் கொடுத்து 18 சதவீத பங்குகளை வாங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆறு மாத காலத்தில் அதன் பங்குகளில்ன் சராசரி வர்த்தக விலையை விட 30 சதவீதம் கூடுதலாக கொடுத்து ஒரு பங்குக்கு 236 என்ற மதிப்பில் பெயின் கேப்பிட்டல் நிறுவனம் மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவன பங்குகளை வாங்குகிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து பங்குச்சந்தையில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மூன்று சதவீதம் வரை உயர்ந்தது.
Preferential Allotment என்ற முறையில் பங்குகளை வாங்குவதால் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவிலான பங்குகளை வாங்கும் வாய்ப்பு பெயின் கேப்பிடலுக்கு தானாகவே கிடைக்கும். அதாவது கூடுதலாக 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பு பெயின் கேப்பிடலுக்கு கிடைக்கிறது இதன் மூலம் 41% வரை இந்த நிறுவனத்தில் பங்குகளை சொந்தமாக்குவதற்கான வாய்ப்பு கிடைத்து உள்ளது.
பெயின் கேப்பிடல் நிறுவனம் இவ்வாறு பங்குகளை வாங்கி நிறுவனங்களை வளர்ச்சி அடைய செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. பெயின் கேப்பிடல் நிறுவனம் இந்த நிறுவன பங்குகளை 236 என்ற விலைக்கு வாங்கி இருப்பதால் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயரும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பெயின் கேப்பிடல் இந்தியாவில் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களில் கணிசமான முதலீடுகளை செய்திருக்கிறது.
இந்த புதிய ஒப்பந்தத்தின் படி தற்போது நிறுவனத்தின் புரமோட்டரான நந்தகுமார் குடும்பத்திற்கு மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் 28.9% பங்குகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருக்கும் நந்தகுமார் எங்களுடைய கூட்டாளியாக பெயின் கேப்பிட்டலை வரவேற்கிறோம் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கி செல்கிறது என கூறினார். மணப்புரம் பைனான்ஸ் தற்போது 6.6 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications