தமிழ்நாட்டைத் தேடியும், தமிழ்நாட்டின் 2ஆம் தர நகரங்களையும் தேடி சர்வதேச அளவில் டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் வந்துகொண்டு இருக்கும் வேளையில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தடுமாற்றம் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு டெக் நிறுவனங்களின் எண்ணிக்கை என்பது பெரிய அளவில் பாதித்தது.
இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கி 2024ல் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 3 முறை குறைக்க உள்ளதாக அறிவித்திருக்கும் வேளையில், அடுத்த வருடம் முதல் அதிகப்படியான நிறுவனங்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் எனக் கணிக்கப்படுகிறது.

இதற்கு முன்னோட்டமாக அமெரிக்காவின் ChainSys நிறுவனம் மதுரையில் தனது புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது. இதன் மூலம் ChainSys நிறுவனத்தில் மட்டும் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
ChainSys நிறுவனம் ஒரு டேட்டா மேனேஜ்மென்ட் கம்பெனியாகும், 1998ல் ஆர்க்கிள் மற்றும் ஜாவா தளத்தில் பணியாற்றித் தற்போது செக்யூரிட்டி, யூசர் மேனேஜ்மென்ட், பேஸ் காம்போனென்ட், கேட்வே காம்போனென்ட் ஆகிய பிரிவில் பணியாற்றி வருகிறது.
மேலும் டேட்டாசார், டேட்டாஜென், டேட்டாஜென்ஸ், ஸ்மார்ட்பாட்ஸ், ஸ்மார்டச் ஆ பில்டர் என 5 சொந்த பிளாட்பார்ம்-ஐ கொண்டு பல தொழில்நுட்ப சேவையை அளித்து வருகிறது. இந்நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்தாலும் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், இந்தியாவில் அலுவலகம் வைத்துள்ளது.
பிற டெக் சேவை நிறுவனங்கள் போலவே ChainSys நிறுவனமும் இந்தியாவில் அதிகப்படியான அலுவலகத்தை வைத்துள்ளது. இந்தியாவில் சென்னை, கோயம்புத்தூர், ஹரியானா ஆகிய இடங்களில் அலுவலகத்தை வைத்திருந்திருக்கும் நிலையில் இந்தியாவில் 4வது அலுவலகம், தமிழ்நாட்டில் 3வது அலுவலகமாக மதுரையில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.
இதைவிட முக்கியமாக ChainSys நிறுவனம் தனது மதுரையை அலுவலகத்தைப் புதிதாகக் கட்டப்பட்ட 2வது ஐடி பார்க் ஆன வடபழஞ்சி எல்காட் பூங்கா-வில் 2வது ஐடி நிறுவனமாகத் துவங்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தில் குறைந்தது 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாட்டின் 2ஆம் தர நகரங்களில் அதிகப்படியான நிறுவனங்கள் தயக்கம் இல்லாமல் வருவதற்கு முக்கியமான காரணம் தமிழ்நாட்டின் அனைத்து மாநிலத்திலும் இருக்கும் வலுவான கல்வி கட்டமைப்பு தான், பெரும்பாலான அனைத்து மாவட்டத்திலும் படித்த பட்டதாரிகள் அதிகளவில் இருக்கும் காரணத்தால் வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் கண்களை மூடிக்கொண்டு கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டத்தில் தனது அலுவலகத்தைக் கொண்டுவருகிறது.
இதற்கு ஏற்றார் போல் மதுரையில் உள்கட்டமைப்பு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதற்கான சிறிய உதாரணம் மதுரை மேற்கு மாசி வீதியில் பொருத்தப்பட்டு உள்ள விளம்பர ஸ்கீரீன். அமெரிக்கா, சீனாவில் இருப்பது போல் மிகவும் பிரம்மாண்டாக உள்ளது.
More From GoodReturns

திடீரென 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா Zoho நிறுவனம்? உண்மை என்ன?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?



Click it and Unblock the Notifications