வாஷிங்டன்: நாம் உண்ணும் சாக்லேட்டுகளில் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உலோகங்களான லெட், காட்மியம் ஆகியவை கலந்து இருப்பதை ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் லெட், காட்மியம் கலந்த சாக்லேட்டுகளை உண்பதன் மூலம் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு Consumer Reports எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. தொண்டு நிறுவனம் போன்று செயல்பட்டு வரும் இந்த அமைப்பானது நுகர்வோர்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக உணவு பொருட்கள் குறித்த பல ஆய்வுகளை செய்துள்ளது. அந்த வகையில் தற்போது சாக்லேட்டுகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது.
இந்த குழு சார்பில் வெவ்வேறு பிராண்டுகளை சேர்ந்த மொத்தம் 43 சாக்லேட் வகைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதாவது டார்க் சாக்லேட், பால் சாக்லேட், கோகோ பவுடர், சாக்லேட் சிப்ஸ், சாக்லேட் கேக், ஹாட் சாக்லேட் உள்பட 7 பிரிவுகளாக சாக்லேட்டுகள் பிரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் 16 வகையான சாக்லேட்டுகள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உலோகங்களை கொண்டிருப்பது தெரியவந்தது. அதாவது சாக்லேட்டில் லெட் மற்றும் காட்மியம் ஆகிய உலோகங்கள் இருந்தது. ஆய்வில் சில சாக்லேட்டுகளில் லெட், சில சாக்லேட்டுகளில் காட்மியம் இருப்பது தெரியவந்தது. சில சாக்லேட்டுகளில் 2ம் உள்ளது.
குறிப்பாக கூற வேண்டும் என்றால் வால்மார்ட்டின்(Walmart) டார்க் சாக்லேட் பார், ஹாட் சாக்லேட் மிக்ஸ், ஹெர்ஷே (Hershey's)மற்றும் ட்ரோஸ்டெயின் (Droste) கோகோ பவுடர், டார்கெட் (Target) நிறுவனத்தின் செமி ஸ்வீட் சாக்லேட் சிப்ஸ், டிரேடர் ஜோ (Trade Joe), நெஸ்லே (Nestle) மற்றும் ஸ்டார்பக்ஸ் (Starbucks) ஆகியவற்றின் ஹாட் சாக்லேட் மிக்ஸ்களில் உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக லெட் மற்றும் காட்மியம் என்பது நரம்பு மண்டலம், சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்த கூடியது. மேலும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கும் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆய்வு முடிவு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் 28 வகையான டார்க் சாக்லேட்டுகளை ஆய்வு செய்தது. இதில் 23 டார்க் சாக்லேட்டுகளில் அதிகளவில் லெட் மற்றும் காட்மியம் இருப்பது தெரியவந்தது. ஹெர்ஷே தயாரிப்புகளிலும் இது கண்டறியப்பட்டது. இதுபற்றி கன்சியூமர் ரிப்போர்ட்ஸ் அமைப்பின் உணவு பாலிசிக்கான டைரக்டர் பிரியன் ரோன்ஹோல்ம் கூறுகையில், ‛‛ஹெர்ஷே என்பது புகழ்பெற்ற நிறுவனம். அதன் தயாரிப்புகளில் லெட், காட்மியம் இல்லாமல் செய்வதை உறுதி செய்ய வேண்டும்'' என்றார்.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் சிஎப்ஓ ஸ்டீவ் வாஸ்குய்ல் கூறுகையில், ‛‛லெட், காட்மியம் அளவை சாக்லேட்டில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது சாக்லேட்டில் இயற்கையாகவே இருக்கும் பொருளாக உள்ளது. இருப்பினும் அதனை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார். இதையடுத்து ஹெர்ஷே நிறுவனம் தனது தயாரிப்புகளில் லெட், காட்மியத்தின் அளவை குறைக்க நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் தான் தற்போது மீண்டும் கன்சியூமர் ரிப்போர்ட்ஸ் சார்பில் பல பிரபல பிராண்ட் சாக்லேட்டுகளில் லெட், காட்மியம் உள்ளிட்ட உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications