தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று வெற்றிகரமாகப் பல கோடி மக்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்னை டிரேட் சென்டரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் வேளையில். தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சி அடையும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது ஜிசிசி-களை ஈர்க்கும் போட்டி ஒவ்வொரு மாநிலத்தின் மத்தியிலும் பெரும் போட்டியை உருவாக்கியுள்ளது. 2023 பொறுத்த வரையில் அதிகளவிலான GCC-களை ஈர்த்த பெருமையை ஹைதராபாத் பெற்றுள்ள வேளையில், 2024 ஆம் ஆண்டில் இந்தப் பெருமையைத் தமிழ்நாடு பெற வேண்டும் என்பதை முக்கிய டார்கெட்டாகக் கொண்டுள்ளது.

இதில் முதல் மெகா அறிவிப்பு ஷூ தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக சென்னையில் மிகப்பெரிய தனது அலுவலகத்தைத் திறந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் ஹெல்த்கேர் டெக்னாலஜி நிறுவனமான MedExpert இந்தியாவில் முதல் முறையாகச் சென்னையில் தனது அலுலவகத்தைத் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
டெக் சேவை துறையில் தற்போது சென்னை GCC Magnet ஆக மாறி வரும் வேளையில் ஹெல்த்கேர் பிரிவில் மிகவும் பிரிபப லமாழ பில்லிங் சேவை அதிலும் குறிப்பாக எமர்ஜென்சி மெடிக்கல் சேவைகளில் பில்லிங் சேவை அளிக்கும் MedExpert சென்னையில் தனது Global Capability Center (GCC) அமைக்க உள்ளது.
இந்தச் சென்னை அலுவலகம் தான் MedExpert நிறுவனத்தின் வருவாய், டெக் சேவை, வொர்க் ப்லோ ஆகியவற்றை மேம்படுத்தும் முக்கியப் பணிகளைச் செய்ய உள்ளது. சென்னையில் இருந்துகொண்டு தனது டெக் சேவை தளத்தை உருவாக்கி, மேம்படுத்துவதைத் தாண்டி வருவாய் மற்றும் லாபத்தில் புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MedExpert தளத்தில் சுமார் 40 லட்சம் பேருக்கு மெடி கிளைம் செய்யப்படுவதோடு 800க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகிறது. தற்போது சென்னை அலுவலகம் வாயிலாக அட்வாஸ் ப்ரெடிக்டிவ் அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் ஆகியவற்றை மேம்படுத்த உள்ளது.
தமிழக அரசின் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு இதற்கு முன்பு 2015 மற்றும் 2019 இல் நடத்தியிருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் மக்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெறுகிறது, இக்கூட்டத்திற்கு முன்பு MedExpert நிறுவனத்தின் அறிவிப்பு முக்கியத் துவக்கமாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications