தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு 2030ஆம் ஆண்டுக்குள் உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு இயங்கி வரும் வேளையில் அடுத்தடுத்து புதிய முதலீடுகளையும், புதிய நிறுவனங்களையும் தமிழ்நாடு அரசு ஈர்த்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் பெருவயல் என்னும் கிராமத்தில், ரூம் ஏர் கண்டிஷனர் (ஆர்ஏசி) மற்றும் கம்ப்ரஸர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இப்புதிய தொழிற்சாலைக்காக சுமார் 1,891 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இதை தொடர்ந்து இன்று காலை தென் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அதை சார்ந்த கட்டமைப்புகள், ஹைட்ரஜன் மொபிலிட்டி ஆகியவற்றுக்கு சுமார் 15000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியானது.
இவ்விரு முதலீடுகளை தாண்டி 2 முக்கிய முதலீட்டு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது, இதில் ஒன்று உற்பத்தி துறையை சேர்ந்தது, மற்றொன்று ஐடி துறையை சேர்ந்தது.
கார்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான கேப்ரியல் இந்தியா, நெதர்லாந்தைச் சேர்ந்த Inalfa Roof Systems உடன் இணைந்து சென்னையில் சன்ரூஃப்களை உற்பத்தி செய்ய கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணி சென்னையில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க சுமார் 170 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதை தொடர்ந்து அமெரிக்காவை தளமாகக் கொண்ட Sagent அமெரிக்காவை தாண்டி வெளிநாட்டு தலைமையகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் 3 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து சென்னையில் புதிய தலைமை அலுவலகத்தை அமைத்துள்ளது. இப்புதிய தலைமை அலுவலகத்தில் துவக்க நிலையாக சுமார் 120 பேரை பணியில் சேர்க்க உள்ளது. வேலைக்கு அமர்த்தவுள்ளது.

வார்பர்க் பின்கஸ் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் Sagent அமெரிக்காவின் பிரபலமான ஃபின்டெக் மென்பொருள் நிறுவனமாக உள்ளது. Sagent நிறுவனம், வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அடமான சேவையை தனது தொழில்நுட்பத்தின் மூலம் நவீனமயமாக்குகிறது. அதன் அமெரிக்க அல்லாத தலைமையகத்தை சென்னையில் இன்று திறந்துள்ளது.
அமெரிக்காவின் மூன்றாவது பெரிய அடமான சேவை வழங்கும் கூப்பருடன் 2022 ஆம் ஆண்டு சேஜென்ட் செய்த கூட்டணி ஒப்பந்தத்தின் மூலம் Sagent நிறுவனத்தின் புதிய சாப்ட்வேர் இன்ஜினியர் குழு அமெரிக்காவிலும், சென்னையிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையில் ஜனவரி 2024ல் தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு முக்கிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்க மே 23 முதல் ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அமைச்சர்கள் குழுவினருடன் பயணம் செய்ய உள்ளார்.

மேலும் இந்தியாவின் முதல் எமர்ஜிங் & டீப்டெக் இன்னோவேஷன் நெட்வொர்க் ஆன iTNTHub-ஐ அண்ணா பல்கலைக்கழக CEG-வளாகத்தில் மே 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இது தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications