VMware நிறுவனத்தின் புதிய சிஇஓ.. இந்தியாவை சேர்ந்த ரகு ரகுராம் நியமனம்..!

டெக் உலகில் இருப்பவர்கள் VMware அப்ளிகேஷன் பயன்படுத்தாவர்களே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு virtualisation தொழில்நுட்ப பிரிவில் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது VMware.

இந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக விளங்கிய Pat Gelsinger ஜனவரி மாதம் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறிய நிலையில், கடந்த சில மாதங்களாகவே புதிய தலைவர் தேடும் பணியில் தீவிரமாக இருந்தது VMware.

 4 மாத தேடல்

4 மாத தேடல்

VMware நிறுவனத்தின் தலைமை பொறுப்பு என்பதால் 4 மாதம் கடுமையான தேடல் மற்றும் ஆலோசனைக்குப் பின்பு இந்நிறுவனத்தின் பிராடெக்ட் மற்றும் கிளவுட் சர்வீசஸ் பிரிவின் தலைமை செயல் அதிகாரியான ரகு ரகுராம் அவர்களைச் சிஇஓ-வாக நியமிக்க VMware நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 ரகு ரகுராம் நியமனம்

ரகு ரகுராம் நியமனம்

இந்தியரான ரகு ரகுராம் மே 12ஆம் தேதி முதல் தனது பணிகளைத் துவங்கியுள்ளதாக VMware நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை ரகு ரகுராம் தனது லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு உள்ளார். VMware நிறுவனத்தையும் சேர்ந்து தற்போது உலகின் பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்.

 ஐஐடி பாம்பே

ஐஐடி பாம்பே

ஐஐடி பாம்பே கல்லூரியில் முதுகலை எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்த ரகு ரகுராம், 1996ல் அமெரிக்காவின் வார்டன் ஸ்கூலில் MBA பட்டம் பெற்று நெட்ஸ்கேப் நிறுவனத்தில் பணியைத் தொடர்ந்தார். அதன் பின்பு பேங் நெட்வொர்ஸ் நிறுவனத்தில் என இந்த இரண்டு நிறுவனத்தில் சுமார் 6 வருடம் பணியாற்றினார்.

 17 வருடம் உழைப்பு

17 வருடம் உழைப்பு

இதன் பின்பு 2003ல் பிராடெக் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைவராக VMwareல் சேர்ந்த ரகு ரகுராம் சுமார் 17 வருடம் 10 மாதங்களுக்குப் பின் இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர்ந்துள்ளார்.

 சஞ்சய் போனென் வெளியேறினார்

சஞ்சய் போனென் வெளியேறினார்

ரகு ரகுராம் சிஇஓவாகப் பதவியேற்கும் இந்தச் சூழ்நிலையில் வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சய் போனென் என்பவர் 7 வருடத்திற்குப் பின் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

 VMware - டெல் பிரிவு

VMware - டெல் பிரிவு

VMware நிறுவனத்தின் தாய் நிறுவனமான டெல் டெக்னாலஜிஸ் தனித்தனி நிறுவனமாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ள இந்தச் சூழ்நிலையில் தான் உயர்மட்ட நிர்வாகத்தில் தலைமை பொறுப்பில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+