அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கும், வொர்க் விசா, டிபடென்ட் விசா மூலம் அமெரிக்காவுக்கு வரும் மக்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கும் உரிமையை ரத்து செய்ய டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து டிரம்ப் பதவியேற்ற நாளிலேயே அமெரிக்காவில் பல தரப்பினர் வழக்கு தொடுத்தனர். இதில் ஒரு வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி அமெரிக்காவில் வசிக்கும் பல லட்ச என்ஆர்ஐ மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் மாவட்ட நீதிபதி டெபோரா போர்ட்மேன் (Deborah Boardman) இந்த வழக்கை விசாரித்து டிரம்ப்-ன் உத்தரவுக்கு எதிரான நிலைப்பாட்டு உடன் தீர்ப்பு அளித்துள்ளார். அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தை டிரம்ப் அரசு தவறாக விளக்குவதாக அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிறப்பால் குடியுரிமை வழங்கும் உரிமையை ரத்து செய்யும் டிரம்ப் அரசின் உத்தரவை செயல்படுத்த கூடாது என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
"இந்த நாட்டில் எந்த நீதிமன்றமும் டிரம்ப் அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நீதிமன்றமும் ஏற்காது" என்று நீதிபதி போர்ட்மேன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வாஷிங்கடன் நீதிமன்றம் டிரம்ப்-ன் உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டு உள்ள வேளையில், 2வது நீதிபதி இதற்கான தடை உத்தரவை வெளியிட்டு உள்ளார்.
"குடியுரிமை என்பது மிகவும் மதிப்புமிக்க உரிமை. அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது சட்ட திருத்தம் இதை வெளிப்படையாக வழங்குகிறது" என்று அவர் கூறியுள்ளார். மேலும் இது பல தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் ஓன்று, எனவே 14-வது சட்ட திருத்தத்தை மாற்ற அனுமதிக்க முடியாது என்பது தான் அனைத்து நீதிமன்றங்களும் கூறும் விஷயமாகும்.
இதேபோல் அமெரிக்காவின் மாவட்ட நீதிபதி டெபோரா போர்ட்மேன் (Deborah Boardman) குடியுரிமை என்பது தேசிய அளவிலான பிரச்சனையாக மாறியிருக்கும் வேளையில், இதற்கு நாடு தழுவிய தடை மட்டுமே முழுமையான நிவாரணத்தை வழங்கும்" என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த சில வாரத்தில் அமெரிக்காவில் அனைத்து மாநிலத்திலும் இதற்காக வழக்கு தொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் மாவட்ட நீதிபதி டெபோரா போர்ட்மேன் (Deborah Boardman) தனது தீர்ப்பை வாசித்த பின்னர், அரசு வழக்கறிஞரிடம் தனது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் தனக்கு உடனடியாக அந்த கேள்விக்கு பதிலளிக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான உடன் கையெழுத்திட்ட birthright citizenship ரத்து செய்யும் உத்தரவு என்ஆர்ஐ-களையும், அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும் என்ற கனவு கொண்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்றால் மிகையில்லை.
பிறப்புரிமை மூலம் குடியுரிமை சட்டத்தின் கீழ் பெற்றோர்கள் யாராக இருந்தாலும், எந்த நாட்டவராக இருந்தாலும் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டோமேட்டிக் முறையில் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. இந்த முறையை தான் தற்போது டிரம்ப் திருத்த உத்தரவிட்டு உள்ளார்.
புதிய விதிமுறைகளின்படி, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பின்வரும் சூழ்நிலைகளில் குடியுரிமை வழங்கப்படாது:
* குழந்தை பிறக்கும் போது தாய் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தால் மற்றும் தந்தை அமெரிக்க குடிமகனாக இல்லாவிட்டாலோ அல்லது சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளராக (permanent resident) இல்லாவிட்டாலோ குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது.
* குழந்தை பிறக்கும் போது தாய் அமெரிக்காவில் இருந்திருந்தாலும் அது தற்காலிகமாக இருந்திருந்தால் (விசா வைவர் திட்டத்தின் கீழ் அல்லது ஸ்டென்ட் விசா, வொர்க் விசா அல்லது டூரிஸ்ட் விசாவில் அமெரிக்காவிற்கு வந்திருந்தால்) மற்றும் தந்தை அமெரிக்க குடிமகனாக இல்லாவிட்டாலோ அல்லது சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளராக இல்லாவிட்டாலோ குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications