தொடரும் அமெரிக்கா - சீனா பிரச்சனை.. DJI, SMIC உட்பட 60 சீன நிறுவனங்கள் மீது தடை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கச் சீனாவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான SMIC, டிரோன் தயாரிப்பில் முன்னோடியான DJI டெக்னாலஜி உட்படப் பல முக்கிய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வர்த்தகம் செய்யத் தடை விதித்துள்ளது.

 

இதன் மூலம் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனைகள் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

டிரம்ப் அரசின்

டிரம்ப் அரசின்

டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்க - சீனா இடையில் நடைபெற்று வரும் வர்த்தகப் போர் தொடரும் என்பதையும், அமெரிக்கா சீனா மற்றும் சீன நிறுவனங்கள் மீதான கடுமையான கண்காணிப்பு தொடரும் என்பதையும் உணர்த்துவதாக உள்ளது.

புதிய அதிபர் ஜோ பிடன்

புதிய அதிபர் ஜோ பிடன்

மேலும் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள ஜோ பிடன் சீனா மீதான தடைகளை நீக்குவது குறித்தும், தளர்வு அளிப்பது குறித்தும் இதுவரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதால் ஜோ பிடன் ஆட்சியிலும் சீனா தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

60 சீன நிறுவனங்கள் மீது தடை
 

60 சீன நிறுவனங்கள் மீது தடை

அமெரிக்காவின் காமர்ஸ் அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 77 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அடங்கிய entity list-ஐ வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 60 நிறுவனங்கள் சீனா-வை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் இதற்கு முன் ஹூவாய் டெக்னாலஜிஸ் உட்பட 150க்கும் அதிகமான நிறுவனங்கள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

சிப் தயாரிப்பு நிறுவனமான SMIC

சிப் தயாரிப்பு நிறுவனமான SMIC

அமெரிக்காவின் வர்த்தக அமைச்சகம், சீனாவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான SMIC மக்களுக்கான தொழில்நுட்பத்தை ராணுவத்திற்குப் பயன்படுவதாகவும், SMIC மற்றும் சீன ராணுவத்தின் தொழிற்துறை நிறுவனங்களுடன் பல்வேறு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பிற நாட்டு ராணுவங்கள் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என SMIC நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்துள்ளது.

 

ட்ரோன் நிறுவனமான DJI

ட்ரோன் நிறுவனமான DJI

இதோடு உலகின் மிகப்பெரிய ட்ரோன் நிறுவனமான DJI, AGCU சைன்டெக், சீனா நேஷனல் சைன்டிபிக் இன்ஸ்ட்ருமென்ட் அண்ட் மெட்டிரீயல்ஸ், குவாங் சீ குரூப் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான மனித உரிமை மீறல் செயல்களைச் செய்யும் காரணத்திற்காக இந்த நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது டிரம்ப் அரசு.

சீனா பதிலடி கொடுக்கும்

சீனா பதிலடி கொடுக்கும்

அமெரிக்க அரசு வெளிநாட்டு நிறுவனங்களை முடக்கும் தொடர்ந்து நடத்தி வருவது ஏற்க முடியாது, இதை நிறுத்தாத பட்சத்தில் சீன அரசும் தக்க நடவடிக்கையை எடுக்கும் எனச் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான Wang Yi தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US blacklists SMIC, DJI including 60 Chinese firms

US blacklists SMIC, DJI including 60 Chinese firms
Story first published: Saturday, December 19, 2020, 12:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X