வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸையும் அமெரிக்க ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையை பல நாடுகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் வேளையில், சீனா நேரடியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.
இதேவேளையில் சீனா கடந்த 15-20 வருடமாக வெனிசுலாவின் முக்கியமான வர்த்தக பார்ட்னராக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் அதிகப்படியான கடன்களை கொடுத்து தனது கடன் வலையில் சிக்கவைத்துள்ளது. அமெரிக்கா தற்போது வெனிசுலாவை கைபற்றிய காரணத்தால் சீனா கொடுத்த கடனின் நிலைமை கேள்விக்குறியாகி நிற்கிறது.

அமெரிக்காவின் இந்த தாக்குதலை சீனா அரசு, கடுமையாகக் கண்டித்துள்ளது,"அமெரிக்காவின் ஆதிக்க நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தையும் வெனிசுலாவின் இறையாண்மையையும் மீறுகின்றன" என்று சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், "அமெரிக்கா சர்வதேச சட்டத்தையும் UN விதிகளையும் பின்பற்ற வேண்டும், பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மீறுவதை நிறுத்த வேண்டும்" என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதை தாண்டி அமெரிக்கா அடுத்தாக கியூபா, கொலம்பியா, மெக்சிகோ ஆகிய லத்தின் அமெரிக்க நாடுகள் மீது இதேபோன்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு சீனாவின் லத்தீன் அமெரிக்கா உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இதேபோல் லத்தின் அமெரிக்க நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் உயர்வை குறைப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கருத்து நிலவுகிறது.
சீனா-வெனிசுலா உறவு
ஆசியாவை தாண்டி தனது வர்த்தகத்தையும், நட்புறைவயும், செல்வாக்கை விரிவுபடுத்துவதில் கடந்த 20 வருடமாக கவனம் செலுத்தி வந்த சீனா கொள்கையில், வெனிசுலா முக்கியப் பங்கு வகிக்கிறது. 2006ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் Hugo Chávez ஆட்சியில் சீனா உடனான உறவு வெனிசுலாவுக்கு தொடங்கியது.
வெனிசுலாவும் சீனாவும் பல வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. சீனாவை "அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிரான கிரேட் வால்" என்று Hugo Chávez வர்ணித்துள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களாக சீனா லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பொருளாதார உறவுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இதன் விளைவாக, இன்று சீனா தென் அமெரிக்க நாடுகளின் முதன்மையான வர்த்தக பார்ட்னராக உள்ளது.
அமெரிக்காவின் நெருங்கிய வர்த்தக பார்ட்னரான மெக்சிகோவுக்கு இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் சீனா இருக்கிறது.
2006ல் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் வெனிசுலா தினசரி ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சீனாவுக்கு வழங்குவதாக உறுதியளித்தது. இதற்கு ஈடாக, சீனா வெனிசுலாவுக்கு அரசியல் ஆதரவு வழங்கியது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர் பதவிக்கு வெனிசுலாவின் விண்ணப்பத்தை ஆதரிப்பது உள்ளிட்டவை சீனா செய்தது.
2008ஆம் ஆண்டுக்குள், சீனாவின் எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை வெனிசுலாவிலிருந்து பெற்றது. இது சீனாவின் எனர்ஜி துறையின் இயக்கத்தில் முக்கிய அங்கமாக இருந்தது வெனிசுலா.
இரு நாடுகளுக்கிடையிலான உறவு வர்த்தக ரீதியாகா இருந்து விரைவில் நிதி ரீதியாக விரிவடைந்தது. சீனா வெனிசுலாவுக்கு பெருந்தொகையை கடனாக வழங்கத் தொடங்கியது, இந்த கடனை எதிர்கால எண்ணெய் விநியோகத்திற்கான உத்தரவாதமாக மாற்றப்பட்டது.
2006 முதல் 2015 வரை சீனா வெனிசுலாவுக்கு 50 முதல் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கடன்களை வழங்கியது. அமெரிக்காவின் தடையின் காரணமாக ஒப்பந்தம் படி சீனாவுக்கு போதுமான எண்ணெய் சப்ளை செய்ய முடியாத காரணத்தால் இந்த நிதியுதவி கடனாக மாறியது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக, சீனாவின் கடன்கள் மற்றும் நிதி உதவிகள் 105.6 பில்லியன் டாலர்களைத் தொட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு முதல், சீனா புதிய கடன்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, ஏற்கனவே உள்ள கடன்களை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும், வெனிசுலா இன்னும் சீனாவின் மிகப்பெரிய கடனாளிகளில் ஒன்றாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வெனிசுலாவில் ஏற்படும் அரசியல் மாற்றம் சீனாவின் கடனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவை அனைத்தையும் விட முக்கியமாக அமெரிக்க தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான், சீனாவின் லத்தீன் அமெரிக்க விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி கியூ சியாவோகி (Qiu Xiaoqi), வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுடன் சந்தித்து பேசினார். இது இரு நாடுகளுக்கிடையிலான நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.
More From GoodReturns

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications