அமெரிக்கா அதிபரின் டிரம்ப்-ன் அதிரடி உத்தரவின் பெயரில் அமெரிக்க ராணுவம் மற்றும் டெல்டா ஃபோர்ஸ் ஜனவரி 3, 2026 அன்று வெனிசுலாவில் பெரிய அளவிலான தாக்குதலை தொடங்கியது. வெளிசுலாவின் தலைநகரான காரகாஸ்-ஐ டார்கெட் செய்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அமெகிக்கா "ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்" என்று பெயரிடப்பட்டது.
இந்த திடீர் தாக்குதல் மூலம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.

அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் ஜான் கெய்ன் கூறுகையில், இந்த நடவடிக்கையில் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபட்டன என தெரிவித்தார். இது உலக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
அமெரிக்கா இந்த தாக்குதலை எப்படி திட்டமிட்டது
ஜனவரி 2 இரவு 10:46 மணிக்கு (அமெரிக்க நேரம்) டிரம்ப் வெனிசுலா மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு உத்தரவிட்டார். ஜனவரி 3 அதிகாலை 1:01 மணிக்கு (அமெரிக்க நேரம்) அல்லது 2:01 மணிக்கு (காரகாஸ் நேரம்) அமெரிக்க படைகள் மதுரோவின் இல்லத்தை அடைந்தன. டெல்டா ஃபோர்ஸ் உள்ளிட்ட சிறப்பு படைகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் இதில் ஈடுபட்டன.
வெனிசுலா நேரத்தில் 2:00 முதல் 2:30 வரை காரகாஸ் நகரில் ஏழு பெரிய குண்டு வெடிப்புகள் நடந்து, குறைவான உயரத்தில் பறக்கும் விமானங்கள் மூலம் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு பணிகளில் அமெரிக்கா ஈடுப்பட்டது. இந்த தாக்குதலில் Fuerte Tiuna உள்ளிட்ட ராணுவ தளங்கள் மற்றும் மிராண்டா, அராகுவா, லா குவைரா போன்ற மாநிலங்களில் முக்கிய இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்க ராணுவம் மாதங்களாக மதுரோவின் இயக்கம், வீடு, பயணம், உணவு, உடை, வளர்ப்பு விலங்குகள் போன்றவற்றை ஆய்வு செய்தது என்று ஜெனரல் டான் கெய்ன் தெரிவித்தார் தாக்குதலுக்கு பின்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலர் Pete Hegseth இந்த செய்தியாளர் சந்திப்பில், ஈரான் நாட்டுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகள் போல் வெனிசுலாவுக்கும், மதுரோவுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இவரும் தவறவிட்டதால் இப்போது விளைவை சந்திக்கிறார் என்று கூறினார்.
டிரம்பின் அறிவிப்பு
இந்த செய்தியாளர் சந்திப்பில் டொனால்டு டிரம்ப் பேசுகையில் வெனிசுலாவில் பாதுகாப்பான அரசு கையில் அரது நிர்வாகம் மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்கா அந்நாட்டில் இருக்கும் என்று கூறினார். அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் பில்லியன் டாலர்களை முதலீடு செய்து, வெனிசுலாவை மீண்டும் வளமான நாடாக மாற்றும் என்று உறுதியளித்தார்.
அமெரிக்க அரசு ராணுவத்தை அந்நாட்டின் கச்சா எண்ணெய் வளங்களை பாதுகாக்க அனுப்பப்படும் என்றும், நாட்டை நிர்வகிக்க அல்ல என்றும் விளக்கினார்.
இறுதியாக பேசும் போது டிரம்ப் கியூபாவில் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கலாம் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications