அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான போரில் சிம்மசொப்பனமாக இருக்கும் ஈரானின் அணுசக்தி திட்டத்தை மொத்தமாக அழிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் அமெரிக்க அரசு, இரு நாடுகள் பேச்சுவார்த்தையில் இருக்கும் வேளையிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்கு பின்பு ஈரான் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து Qeshm தீவில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் ஈரான் ராணுவம் 4 நாடுகளின் எண்ணெய் கப்பல் ஹார்முஸ் வழித்தடத்தில் செல்ல அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், மற்ற நாடுகளின் கப்பல்களைத் தாக்கி வருகிறது.

இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கத் திட்டமிட்டு அமெரிக்கா ராணுவம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ஈரான் அணுசக்தி திட்டம் குறித்த தகவலைக் கொடுக்கும் நபருக்கு சுமார் 20 மில்லியன் டாலர் தொகையும், அவருக்கு relocation பாதுகாப்பையும் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்காவின் சென்டரல் சென்டரல் கமாண்ட் அமைப்பு அறிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவம் தற்போது ஈரான் நாட்டின் யூரேனியம் செறிவூட்டும் இடம், அணு ஆயுதம் தயாரிக்கும் இடம், இயந்திரம் தொடர்பான விபரங்கள், அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டு உள்ள தலைவர்கள், நபர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகிறது, இது தொடர்பான தகவலைக் கொடுக்கும் நபர்களுக்கு 20 மில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 188 கோடி ரூபாய் அளவிலான தொகையை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று நாணய சந்தையில் அமெரிக்க அவருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 94.05 ரூபாயாக உள்ளது.
இதேவேளையில் டிரம்ப், இந்த போரை நிறுத்த வேண்டுமாயின் ஈரான் அரசு தான் டீல்-ஐ முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது மட்டும் அல்லாமல், நாங்கள் ஈரானைத் தாக்கவில்லை என்றால், இன்று இஸ்ரேல் இருந்திருக்காது என வெள்ளிக்கிழமை ப்ளோரிடாவில் டிரம்ப் பேசினார்.
கடந்த 8 மாத போரில் ஈரான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், ராணுவம் என அனைத்தும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் ஈரான் விரைவில் போரை முடித்துக்கொள்ளவே ஆர்வம் காட்டும் தெரிவித்தார்.
தற்போது ஈரானுடன் பேசி வருகிறோம், விரைவில் இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடையும், ஏனென்றால் தற்போது அவர்களுக்கு தற்போது அமைதி தேவை என டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் மிட்டேர்ம் தேர்தலுக்கு முன்பே இஸ்ரேல் தரப்பில் இருந்து டிரம்ப்-க்கு ஈரானின் யூரேனியம் செறிவூட்டும் இடத்தை அழிக்க அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வலியுறுத்தி வந்தது. உலகளாவிய போர் வரலாற்றில் அமெரிக்காவைத் தவிர்த்து வேறு எந்த நாடும் அணு ஆயுதத்தை பயன்படுத்தாத நிலையில் தற்போது அமெரிக்கா அணு ஆயுதத்தில் கை வைத்தால் உலகில் பல நாடுகள் அணு ஆயுதத்தை பயன்படுத்தத் துவங்கும் இதனால் 3ஆம் உலகப் போர் கட்டாயம் வெடிக்கும் என்றம் அச்சம் நிலவியது.
மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின்பு நாடாளுமன்றத்தில் ஆதிக்க நிலை மாறிய காரணத்தால் விரைவில் ஈரான் மீதான போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

