அமெரிக்காவும் சீனா இடையிலான வர்த்தக போர் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை இவ்விரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்து நாட்டில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசிய வேளையில் முக்கியமான முடிவுகள் எட்டப்பட்டது.
இதன் வாயிலாக தற்போது இரு நாடுகளும் பதிலுக்கு பதில் விதித்த இறக்குமதி வரியை குறைப்பதாக அறிவித்துள்ளன. அமெரிக்கா, சீன பொருட்களுக்கு 145% இலிருந்து 30% ஆகவும், சீனா அமெரிக்க பொருட்களுக்கு 125% இலிருந்து 10% ஆகவும் 90 நாட்களுக்கு கட்டணங்களை குறைக்கிறது. இந்த முடிவு சர்வதேச வர்த்தக சந்தைகளை மோசமான நிலையில் இருந்து மீண்டு வர முக்கியமான படியாக அமைந்துள்ளது.

அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர், மற்றும் சீன துணை பிரதமர் ஹி லிஃபெங் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தைகள் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக முடிந்தன. இதன் வாயிலாக S&P 500 பியூச்சர்ஸ் 1.1-1.4% உயர்ந்தன, நாஸ்டாக் பியூச்சர்ஸ் 1.4-1.9% உயர்ந்தன, இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பிரதிபலித்துள்ளது.
இரு நாடுகளும் பொருளாதார பிரிவினையை தவிர்க்க விரும்புவதாக அமெரிக்க கருவூல செயலர் ஸ்காட் பெசென்ட் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
அமெரிக்கா, சீன பொருட்களுக்கு ஏப்ரல் 2 அன்று விதிக்கப்பட்ட கட்டணங்களில் 245 சதவீத புள்ளிகளை 90 நாட்களுக்கு தற்காலிகமாக. சீனா, அமெரிக்க இறக்குமதிகளுக்கு 125% இலிருந்து 10% ஆக கட்டணங்களை குறைத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு உறுதியளித்துள்ளது. இந்த தற்காலிக ஒப்பந்தம், ஃபென்டானில் தொடர்புடைய பொருட்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளையும் உள்ளடக்கியது, இது ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
ஜெனீவாவில் நடந்த இந்த முக்கியமான பேச்சுவார்த்தை, இரு நாட்டை சேர்ந்த முக்கியமான நபர்கள் ஒன்று கூடி இரு தரப்பினரும் ஒருமனதாக சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர், இருப்பினும் இறுதி ஒப்பந்தம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தைகள், உலகின் மிகப்பெரிய இரு பொருளாதாரங்களுக்கு இடையிலான பதற்றத்தை குறைப்பதற்கு முக்கியமான படியாக உள்ளது.
சீனா வெளியிட்ட புதிய வெள்ளை அறிக்கையில், அமெரிக்காவின் வரி விதிப்பை சமாளிக்க தாக்கத்தை சமாளிக்க தங்களுக்கு முழு திறன் உள்ளதாகவும், அமெரிக்காவுடனான உறவை பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அணுகுவதாகவும் தெரிவித்தது. "பெய்ஜிங்கை அச்சுறுத்துவது சரியான அணுகுமுறை அல்ல," என சீனா தெரிவித்துள்ளது.
இந்த கட்டண குறைப்பு ஒப்பந்தம், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான விரிவான பேச்சுவார்த்தைகளுக்கு இடம் அளிக்கும் தற்காலிக நடவடிக்கையாக உள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை, திங்கட்கிழமை இதுகுறித்த கூட்டறிக்கையை வெளியிட உள்ளது.


Click it and Unblock the Notifications