அமெரிக்கா விதித்துள்ள ரெசிப்ரோக்கல் வரிகளுக்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனடியாக அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சீனா, அந்நாட்டுப் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் பாதுகாக்கப் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
டிரம்ப் தலைமையிலான அரசு அந்நாட்டுக் கடனை குறைக்கவும், தனது வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கத்தைப் பணமாக்கும் முயற்சியில், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் வர்த்தக கூட்டாளிகள் நாடுகள் மீதும் ரெசிப்ரோக்கல் வரியை விதித்து வருமானம் ஈட்ட முடிவு செய்துள்ளது.

15 சதவீதம் முதல் 55 சதவீதம் வரையில் வரியை டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்துள்ளார். இதுதவிர வரி விதிப்பில் சிக்காத நாடுகளிடம் இருந்து வரும் பொருட்களில் இருந்து வருமானத்தை ஈட்டும் பொருட்டு பொதுவாக அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத அடிப்படை இறக்குமதி வரியை விதித்துள்ளார் டொனால்டு டிரம்ப். இதன் மூலம் அமெரிக்காவுக்குக் குண்டுமணி விற்றாலும் வரி, ஏரோபிளேன் விற்றாலும் வரி.
இந்த நிலையில் சீன வர்த்தக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பல ஆண்டுகளாக வர்த்தக பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்ட நலன்களை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மொத்தமாக இந்த வரி மூலம் ரத்து செய்துள்ளது என்று விமர்சித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் இந்த முடிவைப் பல வார திட்டமிடலுக்கு பின்பு கொண்டு வந்துள்ளது, எனவே இதில் இருந்து பின்வாங்காது. இதேபோல் இந்தியா, பிரிட்டன் உட்பட பல நாடுகள் தற்போது டிரம்ப் அரசுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்குச் சாதகமாக ஏதேனும் பிற நாடுகளிடம் இருந்து பொருட்களே, சேவைகளோ கிடைத்தால் கட்டாயம் வரி குறைக்கப்படும் என்பது தான் டிரம்ப்-ன் திட்டம்.
அமெரிக்கா - சீனா மத்தியிலான பேச்சுவார்த்தையில் எவ்விதமான உடன்பாடு ஏற்படாது, இப்படியிருக்கும் வேளையில் சீனா அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையில் வரியை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், சீன பொருட்கள் மீது 34% வரி விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே விதிக்கப்பட்ட 20% வரியுடன் இது சேர்ந்து, மொத்த வரி 54% ஆக உயர்கிறது. டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அச்சுறுத்திய 60% வரி விகிதத்திற்கு இணையான வரி இது. இந்த வரிகள் அமல்படுத்தப்படுவது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதட்டங்களை மேலும் அதிகரிக்கிறது.
டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு முறையின் கீழ், உலக நாடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுக்கும் 10% அடிப்படை வரி விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையான அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து பொருட்களுக்கு இந்த அடிப்படை வரி வரும் சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும். இதேபோல் நாடு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள ரெசிப்ரோக்கல் வரி ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய வரிகளுக்குக் கூடுதலாக, அதிபர் டிரம்ப் "டி மினிமிஸ்" எனப்படும் வர்த்தக ஓட்டையை மூட நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஓட்டை மூலம் சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் குறைந்த மதிப்புள்ள பார்சல்கள் அமெரிக்காவிற்கு வரி இல்லாமல் நுழைய அனுமதிக்கப்பட்டது. இந்த ஓட்டையை மூடுவது அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகத்தை மேலும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications