அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்த ரெசிப்ரோக்கல் வரி 90 நாடுகளுக்கு ஒத்திவைத்துள்ளது மூலம் ரெசிஷன் அச்சம் சிறிய அளவில் குறைந்துள்ளது. இதேவேளையில் டிரம்ப் சீனாவை மட்டும் கட்டம்கட்டி அடிக்க துவங்கியுள்ளது இந்தியாவுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. இதை கடந்த டிரம்ப் ஆட்சியில் ஏற்பட்ட வர்த்தக போரில் உருவாக சீனா பிளஸ் 1 போன்று இந்தியா தனது சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது, பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு வந்தாலும், இந்தியா முதலாவதாக இருதரப்பு ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சீனாவுக்கு செல்ல வேண்டிய வர்த்தகம், முதலீடு, வாய்ப்புகள் அனைத்தும் இந்தியாவுக்கு வரும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெளியிட்ட அறிவிப்பு உலக வர்த்தகச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவுக்கு வரி உயர்வு: சீனா மீது விதிக்கப்பட்டிருந்த 104 சதவீத வரியை 125 சதவீதமாக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற நாடுகளுக்கு அவகாசம்: அதே நேரத்தில், மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த கால அவகாசம், சம்பந்தப்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்த உதவும் என கருதப்படுகிறது.
டிரம்ப்-ஐ பிரதமர் மோடி சந்தித்த போது, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும், இந்த ஆண்டின் இறுதிக்குள் முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க பிப்ரவரி மாதத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டன. 2030 ஆம் ஆண்டிற்குள் இருவழி வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர் வரையில் உயர்த்துவதே இதன் முக்கிய குறிக்கோளாகும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் கூடுதல் வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது இந்தியாவுக்கு பெரிய அளவில் பலன் அளித்துள்ளது, குறிப்பாக இந்திய இறால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.
இறால் ஏற்றுமதியாளர்களை தாண்டி அமெரிக்கா வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது சுமார் 14 பில்லியன் டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் 9 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதி துறைக்கும் ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
More From GoodReturns

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications