டெக் துறையில் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது ஏஐ அடிப்படையிலான சேவையில் தான் இருக்கிறது எனத் தீவிரமாக நம்பப்படும் வேளையில், இத்தொழில்நுட்பத்திற்கான அடிப்படை கட்டமைப்பு என்பது அனைத்து துறை நிறுவனங்களுக்கும் அவசியமாகியிருக்கிறது. இந்த முக்கியமான காலகட்டத்தில் சென்னையில் ஏஐ சூப்பர்கிளஸ்டர் அமைக்கும் திட்டத்துடன் அமெரிக்க நிறுவனமான Vultr வந்துள்ளது.
இந்தியாவில் அம்பானி, அதானி, டாடா முதல் பல நிறுவனங்கள் தற்போது ஏஐ டேட்டா சென்டர் அமைக்கும் பணியில் இருக்கும் வேளையில், அமெரிக்காவைத் தாண்டி பெரிய டேட்டா சென்டரை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் Vultr வந்துள்ளது.

இதன் மூலம் சென்னையில் 20 மெகாவாட் ஏஐ சூப்பர்கிளஸ்டர் அமைக்கப்பட உள்ளது, இந்த டேட்டா சென்டரில் 10000 ஏஎம்டி நிறுவனத்தின் இன்ஸ்டிங்க்ட் MI355X GPU நிறுவப்பட உள்ளதால், பெரியளவிலான ஏஐ டிரைனிங் மற்றும் இன்டர்பேஸ் வொர்க்லோடு செயல்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த புதிய ஏஐ சூப்பர்கிளஸ்டர் அமைக்க எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது என இந்நிறுவனம் தெரிவிக்காவிட்டாலும், இது ஏஐ ஸ்டார்ட்அப், டெவலப்பர்கள், மற்றும் வர்த்தகங்களுக்குப் பெரியளவில் பயனளிக்கும் என Vultr நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அதிகாரியான கெவின் கோச்ரானே தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பம் மேம்பட்ட திறனுடன் இருந்தாலும் இதை உலகளாவிய சந்தைகளுக்கு ஒரு அப்பிளிகேஷனாக அறிமுகம் செய்வதிலும், ஏஐ அடிப்படையிலான வளர்ச்சிக்கு இந்தியா முக்கிய தூணாக இருக்கப்போகிறது. இந்தியாவில் இருக்கும் இன்ஜினியரிங் திறன் தான் Vultr நிறுவனத்திற்கான முதலீட்டுக்கு அடிப்படை காரணமாக உள்ளது என கெவின் தெரிவித்தார்.
மேலும் Vultr நிறுவனம் இந்தியாவில் 2022ல் தனது கிளவுட் இன்பரா சேவையைத் துவங்கி பெங்களூர், மும்பை, டெல்லி - என்சிஆர் பகுதியில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்திருந்தாலும், அமெரிக்காவை விட்டு வெளியே பெரும் ஏஐ டேட்டா சென்டரை சென்னையில் அமைக்க முடிவு செய்துள்ளது தனி சிறப்பு.
மேலும் Vultr நிறுவனம் இந்தியாவில் 1 ஜிகாவாட் கம்பியூட்டிங் பவர் உருவாக்கும் இலக்கு கொண்டு இருக்கும் வேளையில் இதில் சென்னை முக்கிய பங்கு வகிக்க உள்ளது, இதேபோல் சென்னை ஏஐ சூப்பர்கிளஸ்டரை தொடர்ந்து விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தையும் கொண்டு உள்ளது.
இப்புதிய டேட்டா சென்டர் அமைக்கும் திட்டத்தை அறிவித்த அதே கூட்டத்தில் Vultr நிறுவனம் தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான தலையாய அமைப்பாக விளங்கும் ஸ்டார்ட்அப்TN முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் தகுதியுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கிளவுட் கம்பியூட்டிங் கிரெட்டிஸை குறைவான விலையில் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications

