அமெரிக்கா: இந்தியாவை சேர்ந்த அரசு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்களை பெறுவதற்காக அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் வழங்கியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்குகளில் தண்டனையிலிருந்து தப்பிக்க இந்த நிறுவனங்கள் 1600 கோடி ரூபாயை அபராதமாக செலுத்தி இருப்பதும் தற்போது வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கக்கூடிய சட்டங்களின் அடிப்படையில் ஒப்பந்தங்களை பெறுவதற்காக அந்த நிறுவனங்கள் எந்த ஒரு முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது. நியாயமான வர்த்தக முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது நிபந்தனை.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த அரசு நிறுவனங்களோடு ஒப்பந்தம் பெறுவதற்கு இங்கு இருக்கும் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன்படி அமெரிக்காவை சேர்ந்த ஏரோஸ்பேஸ் நிறுவனமான மூங்க், ஐடி பிரிவில் செயலாற்றும் ஒராக்கிள், கெமிக்கல் தயாரிக்கும் நிறுவனமான ஆல்பமார்லே ஆகிய மூன்று நிறுவனங்களும் இந்தியாவை சேர்ந்த இந்தியன் ரயில்வே, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஒப்பந்தங்களை பெறுவதற்காக பல கோடி ரூபாய்க்கு லஞ்சம் வழங்கியுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகளில் இருந்து தண்டனை பெறுவதில் இருந்து தப்பிக்க இந்த மூன்று நிறுவனங்களும் 1600 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளன. அதாவது இந்த நிறுவனங்கள் லஞ்சமாக வழங்கிய தொகையை விட மூன்று மடங்கு அளவுக்கு அபராதம் செலுத்தியுள்ளன.
இந்தியாவைத் தவிர இந்த நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, இந்தோனேசியா, வியட்நாம் நாடுகளை சேர்ந்து நிறுவனங்களுக்கும் அதன் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக நவம்பர் மாதத்தில் தான் அமெரிக்க அதிகாரிகளும் நியூயார்க்கை சேர்ந்த நீதிமன்றமும் அதானி குழுமம் சோலார் எனர்ஜி பிரிவில் ஒப்பந்தங்களை பெறுவதற்கு இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது என்றும் அதனை மறைத்து அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து மூலதனத்தை திரட்ட முயன்றது எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை கண்டன. இப்படி ஒரு சூழலில் தான் தற்போது அதே போன்ற ஒரு புகார் அமெரிக்க நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க சட்டத்தின் படி நிறுவனங்கள் ஒப்பந்தங்களை பெற நியாயமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவற்றின் மீது வழக்கு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
Story written by: Devika
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications