உங்கள் ஊரில் பிரபலமானவர் அதேநேரம் செல்வந்தவராக இருப்பவரிடம், ஊர் மக்கள் தங்களுடைய பணத்தை பாதுகாப்பாக வைக்கவும், ஒரு முதலீடு போல இதை நிர்வாகவும் செய்யவும் பணத்தை கொடுக்கிறார்கள். சில வருடம் இந்த முதலீடு எல்லோருக்கும் பலன் கொடுக்கிறது, ஆனால் ஒரு கட்டத்தில் இந்த செல்வந்தவர் மூலம் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக ஊர் மக்கள் கொடுக்க பணத்தை கேட்கிறார்கள்.
இப்போது அந்த செல்வந்தவர் ஒரே நேரத்தில் அனைவருக்கும் பணத்தை கொடுக்க முடியாமல் போனால் என்ன ஆகும்..? இதேபோன்ற பிரச்சனை தான் தற்போது அமெரிக்காவுக்கு நடக்கிறது. இந்த பிரச்சனை உலகப் பொருளாதாரத்திற்கு முக்கிய கேள்வியாக இருக்கப்போகிறது என முதலீட்டு வங்கியாளரான சார்த்தக் அஹூஜா எச்சரிக்கிறார்.

IMF-இன் சமீபத்திய எச்சரிக்கை அறிக்கையில், அமெரிக்காவின் 36 டிரில்லியன் கடன், கட்டுப்பாட்டைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா இக்கடன் அளவு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் மொத்த GDP-ஐ விட அதிகமாகும். இந்த கடன் தொகையை அமெரிக்க மக்கள் தொகையுடன் கணக்கிட்டால் ஒவ்வொரு அமெரிக்கர் தலையிலும் 100,000 டாலர் கடன் உள்ளது.
அமெரிக்காவின் 36 டிரில்லியன் டாலர் கடன் என்பது ஓவர்நைட்டில் அதிகரித்தது இல்லை. இந்த கடன், 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்க வங்கிகளை திவாலாவதில் இருந்து கார்ப்பாற்றவும், அந்நாட்டின் ராணுவத்திற்கு போதுமான நிதியை தொடர்ந்து உட்செலுத்தவும், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்வதற்கும், அந்நாட்டின் நுகர்வோர் சந்தையை தொடர்ந்து உயிர்ப்புடன் வைக்க மக்கள் தொடர்ந்து கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கும் சூழ்நிலையை தக்கவைக்கவும் என பல முக்கியமான காரணங்களுக்காக அமெரிக்க அரசு பத்திரங்களை விற்பனை செய்து உலக நாடுகளிடம் இருந்து கடனை பெற்றது.
இப்போது, அமெரிக்காவிற்கு கடன் அளித்தவர்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார சூழ்நிலையின் காரணமாக தங்கள் பணத்தை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளனர். சீனா, ஜப்பான், பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் அமெரிக்க டிரெஷரி பாண்டுகளை தொடர்ந்து விற்கத் தொடங்கியுள்ளனர்.

இதில் முக்கியமாக சீனா, அமெரிக்காவின் அரசு பத்திரத்தில் மிகப்பெரிய முதலீடு செய்து கடன் அளித்துள்ளது. சீனா தனது பொருளாதாரத்தையும், நாணய மதிப்பை நிலை நிறுத்தவும் அமெரிக்க அரசு பத்திரங்களை விற்பனை செய்ய துவங்கியுள்ளது. இதேபோல் ஜப்பானும் தனது விற்பனையின் வேகத்தை சமீபத்திய காலங்களில் அதிகரித்துள்ளது. மேலும் பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளும் தங்களின் முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர்.
இந்த திடீர் விற்பனை அமெரிக்காவின் நிதி நிலைத்தன்மையை பெரும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது, இந்த திடீர் விற்பனை காரணமாக அமெரிக்காவின் கடன் சுழற்சியை மோசமாக்கி வருகிறது.
அமெரிக்கா அரசு பத்திர முதலீட்டாளர்களை தக்கவைக்க வட்டி விகிதங்களை உயர்த்துகிறது. ஆனால் இந்த வட்டி உயர்வு மூலம் அமெரிக்காவுக்கு ஒரு ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலர் கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது, இது அமெரிக்க ராணுவ பட்ஜெட்டை விட அதிகம்.
இதன் காரணமாக உலகளாவிய மூலதன ஓட்டங்களை சமீபத்தில் மாற்றியுள்ளது. அமெரிக்க அரசு பத்திரங்களை விற்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் இந்த பணத்தை தங்கத்திற்கு பக்கம் திருப்பியுள்ளது. இதனாலேயே தங்கம் விலை இந்த ஆண்டு எப்போது இல்லாத வகையில் 53 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதேவேளையில் டாலர் மதிப்பு சரிந்து சீன யுவான் மதிப்பு உயர துவங்கியுள்ளது. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது தான் நிதர்சனம்.

இத்தகைய மோசமான சூழ்நிலையை சமாளிக்க அமெரிக்காவின் டிரம்ப் அரசு விரைவாக செயல்பட வேண்டியுள்ளது. அரசு பத்திரங்களின் முதலீடுகள் வெளியேறுவதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். இதேபோல் பத்திரங்களை விற்கும் நாடுகளுக்கு பணத்தை கொடுத்த போதுமான நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டும். இதற்கு அமெரிக்க அரசு செலவுகளை குறைத்து வரிகளை உயர்த்த வேண்டும் என சார்த்தக் அஹூஜா தனது லின்கிடுஇன் பதிவில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications