பிரிட்டன், ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்க பொருளாதாரம் திவாலாகுமா என்ற அச்சத்தில் உலக நாடுகளும், முதலீட்டாளர்களுக்கும் பயந்து வந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்து கார்த்திருந்த அமெரிக்க அரசின் கடன் வரம்பை அதிகரிக்கும் ஒப்பந்தத்திற்கு முடிவு கிடைத்தது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் எதிர்கட்சியான குடியரசுக் கட்சித் தலைவர் மெக்கார்த்தி ஆகியோர் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க பொருளாதாரம் திவால் ஆவதில் இருந்து தடுக்க அமெரிக்க அரசின் கடன் உச்ச வரம்பை அதிரிப்பதற்கான இறுதி இரு-கட்சி மசோதா தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு எப்போது ஒப்புதல் கிடைக்கும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை நடந்த கூட்டத்தில் கடன் வரம்பை உயர்ந்தும் மசோதாவை நிறைவேற்றியது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இந்த மசோதா ஒப்புதல் பெறுமா என்ற அச்சம் பவருக்கு இருந்தாலும், குடியரசுக் கட்சியினர் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெற்று 314-க்கு 117 வாக்குகள் பெற்று இந்த ஒப்பந்தம் செனட் சபைக்கு செல்கிறது.
செனட் சபையில் ஜோ பைடனின் டெமாக்ரடிக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளதால் இந்த ஒப்பந்தம் எவ்விதமான தாமதமும் இல்லாமல் ஒப்புதல் பெறும். இதன் மூலம் அமெரிக்க கருவூல பிரிவின் தலைவரான ஜெனட் யெலன் நிர்ணயம் செய்த ஜூன் 5 ஆம் தேதிக்கு முன்பே அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடன் வரம்பை உயர்த்துவதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதோடு அமெரிக்க பொருளாதாரம் திவாலாகும், மக்களுக்கான அடிப்படை சேவைக்கு கூட கடன் பெற்று செலவு செய்ய முடியாத நிலை குறித்த அச்சம் இனி இருக்காது. 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள வேளையில் ஜோ பைடன் அரசுக்கு இது பெரிய சவாலாகவே இருந்தது.

ஜோ பைடன் மற்றும் எதிர்கட்சி தலைவரான மெக்கார்த்தி உடனான பேச்சுவார்த்தையில் உருவான இறுதி இரு-கட்சி மசோதா-வின் போது குடியரசுக் கட்சி தரப்பில் பைடன் நிர்வாகத்தின் சில முக்கிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கான நிதியுதவியை நிறுத்த அல்லது குறைக்க வலியுறுத்தியது.
இதில் முக்கியமாக ஜோ பைடன் அரசு அமெரிக்க மக்களுக்கு அளிக்கும் சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவுகளுக்கான கடுமையான நிபந்தனைகள், மாணவர் கடன் தள்ளுபடியை கைவிடுதல் மற்றும் IRS துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்தல் போன்றவை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதை செய்தாலே அடுத்த 10 வருடத்தில் சுமார் 1.5 டிரில்லியன் டாலர் அளவிலான தொகையை சேமிக்க முடியும் என கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications