ஈரானுக்கு வேட்டு வைக்கக் களமிறக்கப்படும் அமெரிக்காவின் 3வது போர் கப்பல்.. நவம்பர் மாதம் வெடிக்கும் மெகா போர்!

அமெரிக்கா - ஈரான் மத்தியில் இந்த வாரத் துவக்கத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் இப்போருக்கு விடிவுகாலம் பிறக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கம் போல் இரு நாடுகளும் அவரவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த காரணத்தால் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நவம்பர் மாதம் நடக்கும் மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின்பு ஈரான் மீது இதுவரையில் நடத்திடாத பெரும் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு உள்ளது. இதற்காக முதல் படியாக அமெரிக்க பாதுகாப்புத் துறை ஈரான் எல்லையில் 3வது விமான தாங்கிய போர்க் கப்பலை நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அல் ஜசிராவிடம் தெரிவித்துள்ளனர்.

ஈரானுக்கு வேட்டு வைக்கக் களமிறக்கப்படும் அமெரிக்காவின் 3வது போர் கப்பல்.. நவம்பர் மாதம் வெடிக்கும் மெகா போர்!

அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் துவங்கி 8 மாதங்கள் ஆன நிலையில் இரு புறமும் அடுத்தகட்ட போருக்காகத் தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை USS Theodore Roosevelt குழு சான் டியாகோ தளத்தில் இருந்து ஈரானுக்குக் கிளம்பியுள்ளது.

இதேபோல் மார்கின் தீவு கடற்படை குழு 2000 வீரர்கள் உடன் ஈரான் மீதான தாக்குதலுக்காகப் புறப்பட்டு உள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் 3 விமான தாங்கிய போர் கப்பலும், 2 முக்கிய தாக்குதல் படைகளும் ஈரான் மீதான தாக்குதலுக்காக நிறுத்தப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read

ஏற்கனவே வளைகுடா பகுதியில் 50000த்திற்கும் அதிகமான வீரர்கள் இருக்கும் நிலையில் தற்போது F-35 பைட்டர் ஜெட் உடன் ஒரு போர் கப்பல், 2 தாக்குதல் படைகள் சேர்க்க உள்ளது அமெரிக்கா, இந்த மாபெரும் படை மூலம் ஈரான் மீது பல விதமான தாக்குதல்களை மேற்கொள்ள முடியும் என டிரம்ப் தீவிரமாக நம்புகிறார்.

Recommended For You

மறுமுனையில் ஈரான் ராணுவம் நேற்று வெளியிட்ட பதிவில் CBRN அதாவது கெமிக்கல், பயோலாஜிக்கல், ரோடியோலாஜி, நியூக்ளியர் தாக்குதல் நடந்தால் வீரர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளத் தேவையான உபகரணங்களைக் கொடுத்துள்ளது. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது, மேலும் ஈரான் சுமார் 46 முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தலாம் வகைப்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் அமெரிக்காவில் மிட்டேர்ம் தேர்தலுக்கு பின்பு இரு நாடுகளும் பெரும் தாக்குதலை நடத்துவதற்கு தயாராக உள்ளதால் முதலீட்டு சந்தை, பொருளாதாரம், வர்த்தக சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கச்சா எண்ணெய், எரிவாயு, பெட்ரோகெமிக்கல் சப்ளையில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+