அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 104 இந்தியர்களை அமெரிக்க அரசு தனது ராணுவ விமானத்தில் ஏற்றி இந்தியாவில் தரையிறக்கியது. இந்த விஷயம் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறியிருக்கும் வேளையில் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 2009 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 15,756 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார். அதிலும் 2019ல் அதிகப்படியான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளதாகவும் புள்ளிவிபரங்களை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 2019 எண்ணிக்கையை ஒப்பிடும் போது இந்த 104 பேர் என்பது மிகவும் சிறிய எண்ணிக்கையாகும்.

புதன்கிழமை அமெரிக்க இராணுவ விமானம் மூலம் அமிர்தசரசுக்கு வந்த 104 இந்திய குடிமக்களின் விவகாரம் தொடர்பாக எதிர் கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது என்பது புதிய நடைமுறை அல்ல, பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறையில் உள்ள செயல்முறை என்றும் தெரிவித்தார்.
இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளின் தரவுகளின் அடிப்படையில், 2009 ஆம் ஆண்டில் 734 பேர், 2010 ஆம் ஆண்டில் 799 பேர், 2011 ஆம் ஆண்டில் 597 பேர், 2012 ஆம் ஆண்டில் 530 பேர், 2013 ஆம் ஆண்டில் 550 பேர் என அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, 2014 ஆம் ஆண்டில் 591 பேரும், 2015 ஆம் ஆண்டில் 708 பேரும் நாடு கடத்தப்பட்டனர். 2016 ஆம் ஆண்டில் 1,303 பேரும், 2017 ஆம் ஆண்டில் 1,024 பேரும், 2018 ஆம் ஆண்டில் 1,180 பேரும் நாடு கடத்தப்பட்டனர்.
இதில் அதிகபட்சமாக 2019 ஆம் ஆண்டில் 2,042 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 2020 ஆம் ஆண்டில் 1,889 பேரும், 2021 ஆம் ஆண்டில் 805 பேரும், 2022 ஆம் ஆண்டில் 862 பேரும், 2023 ஆம் ஆண்டில் 670 பேரும் நாடு கடத்தப்பட்டனர். ஆண்டு 1,368 பேரும், இந்த ஆண்டு 104 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் புள்ளிவிபரத்தை வெளியிட்டு உள்ளார்.
மேலும் புதன்கிழமை அமெரிக்க விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்பிய 104 பேரில் ஒருவரான ஜஸ்பால் சிங், தங்களை கைவிலங்கு போட்டு, கால்களில் சங்கிலி போட்டு கொண்டு வந்ததாகவும், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறங்கிய பிறகே அவற்றை அவிழ்த்தனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய இந்தியர்கள் மீது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்கள் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஜெய்சங்கர் கூறுகையில், இந்த நாடு கடத்தல் நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவின் Immigration and Customs Enforcement (ICE) மூலம் மூலம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார். 2012 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள விதிமுறையின் படி விமானங்கள் மூலம் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதை தான் தற்போது Immigration and Customs Enforcement (ICE) அமைப்பு பின்பற்றியுள்ளது. இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவரப்படும் போது உணவு, பிற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி உள்ளிட்ட தேவைகளை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். இந்த நிலையில் பிப்ரவரி 5, 2025 அன்று 104 பேரை அழைத்து வந்த விமானமத்திலும் இந்த நடைமுறைகளுக்கு இணங்கியப்படியே வந்தாகவும் தெரிவித்தார்.
More From GoodReturns

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!



Click it and Unblock the Notifications