பஞ்சாப்: அமெரிக்காவில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் முறைகேடாக நுழைந்து தங்கி இருந்த இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தி உள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்றதிலிருந்து முறைகேடாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை பிடித்து மீண்டும் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறது.
டிரம்ப் பதவியேற்றதில் இருந்து தற்போது வரை 332 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

இவ்வாறு அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களில் 38 சதவீதம் பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள், 33 சதவீதம் பேர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள், 22 சதவீதம் பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கிடையாது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் முறைகேடாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்ததாக தடுக்கப்பட்ட 96 ஆயிரம் பேரில் இந்தியாவில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்களாம்.
அமெரிக்கா செல்ல வேண்டும் என எண்ணுபவர்கள் அரசு அங்கீகரித்த முகவர்கள் வழியாக மட்டுமே விண்ணப்பம் செய்து முறையான ஆவணங்களுடன் மட்டுமே செல்ல வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசும், காவல்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இருந்தாலும் சில போலியான முகவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களை அறிந்து ஆசை வார்த்தைகளை கூறி பல லட்சங்கள் பணத்தை பறித்துக் கொண்டு இவ்வாறு அனுப்பி வைக்கின்றனர்.
இவர்கள் நேரடியாக அமெரிக்காவிற்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள். இந்தியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து மற்றொரு நாடு, அங்கிருந்து மற்றொரு நாடு என படிப்படியாக அமெரிக்காவுடன் எல்லையை பகிர்ந்திருக்கும் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் அங்கிருந்து எல்லை வழியாக இவர்கள் எப்படியாவது கடந்து அமெரிக்காவினுள் நுழைந்து விட வேண்டும்.
இவ்வாறு முறைகேடாக அனுப்பப்படும் இந்தியர்கள் பலரும் பல நாட்கள் உணவு குடிநீர் கூட கிடைக்காமல் அடர்ந்த வனப்பகுதிகளிலும் நெடுஞ்சாலைகளிலும் சிக்கித் தவித்து பின்னர் திருட்டுத்தனமாக சுவர் ஏறி குதித்து அமெரிக்காவில் நுழைகின்றனர். அமெரிக்காவில் நுழைந்தால் அங்கே நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது அமெரிக்க அரசு அவர்களை பிடித்து மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்து விடுகிறது.
ஹரியானா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களும் குடும்பத்தினரும் தொடர்ந்து இதுபோல முறைகேடாக அமெரிக்காவிற்கு செல்வதற்காக பல லட்சங்களை செலவழித்து ஏமாந்து நிற்கின்றனர்.
வேலைவாய்ப்பு பிரச்சனை இதற்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதே போல இந்தியாவில் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும் குறிப்பிட்ட சில தொழில்களுக்கு அமெரிக்காவில் கிடைக்கும் அதிக சம்பளமும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு சிலர் ஏற்கனவே இந்தியா திருப்பி அனுப்பப்பட்டு இரண்டாவது முறையாக அமெரிக்காவிற்கு முறைகேடாக சென்ற நிகழ்வுகளும் இதில் அடங்கும்.
Story written by: Devika
More From GoodReturns

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications