அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகஸ்ட் 6ஆம் தேதி, இந்தியா ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் எரிபொருளை வாங்குவதை காரணம் காட்டி ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியோடு கூடுதலாக 25 சதவீத வரியை விதித்து இந்தியப் பொருட்களுக்கு மொத்தம் 50% வரி விதிப்பை அறிவித்தார்.
இது இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகளில் பெரும் பாதிப்பையும், வேலைவாய்ப்பு இழப்பு, வர்த்தக இழப்பு, வருவாய் இழப்பு என பல பாதிப்புகளை ஏற்படுத்த உள்ளது. ஆனால் 3 துறைகளுக்கு மட்டும் வரி விலக்கு அளிப்பது மட்டும் அல்லாமல் அமெரிக்கா, இந்தியாவை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்திய-அமெரிக்க வர்த்தக புள்ளிவிபரம்:
2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் இந்தியாவுடனான மொத்த சரக்கு மற்றும் சேவைகள் வர்த்தகம் சுமார் 212.3 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் சரக்கு (Goods) வர்த்தகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேர்த்து 128.9 பில்லியன் டாலர்களாகவும், சேவைகள் வர்த்தகம் 83.4 பில்லியன் டாலர்களாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்கா, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் சரக்குகளின் மதிப்பு என பார்த்தார் 41.5 பில்லியன் டாலர்களாகவும், இதேவேளையில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களின் மதிப்பு 87.3 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது. இதனால் 45.8 பில்லியன் டாலர்களின் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த வர்த்தக பற்றாக்குறையை சரி செய்யவே டிரம்ப் முதல் கட்டமாக 25 சதவீத வரியை விதித்தார்.
இதேபோல் சேவைகள் துறையை பார்த்தால், அமெரிக்கா, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் சேவைகளின் மதிப்பு 41.8 பில்லியன் டாலர்களாகவும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் சேவைகளின் மதிப்பு41.6 பில்லியன் டாலர்களாகவும் இருந்து, இதனால் அமெரிக்கா சுமார் 102 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக உபரி கொண்டுள்ளது.
ஐடி சேவை துறை எஸ்கேப்:
சேவை துறையில் இந்தியா - அமெரிக்காவுக்குமான வர்த்தகத்தில் அமெரிக்கா கூடுதல் வர்த்தகம் கொண்டுள்ளதால் இத்துறையின் மீது எவ்விதமான வரியும் விதிக்கப்படவில்லை. இதனால் ஐடி துறைக்கும், பிற சேவை துறை வர்த்தகத்திற்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை. இதேபோல் கூடுதலாக ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் காரணத்தால் அமெரிக்காவுடன் வர்த்தக தொடர்பு கொண்ட இந்திய சேவைத்துறை நிறுவனங்களுக்கு எவ்விதமான வரியும் இல்லை.
முக்கிய ஏற்றுமதி பொருட்கள்:
இந்தியாவின் அமெரிக்காவுக்கான முக்கிய ஏற்றுமதி துறைகளில் மருந்து பொருட்கள், டெலிகாம் கருவிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், விலைமதிப்பற்ற ரத்தினம் மற்றும் தங்க நகைகள், பெட்ரோலியப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
முக்கியமான 2 துறைகள்:
இந்தியா அமெரிக்கா மத்தியிலான சரக்கு வர்த்தகத்தில் சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்கீட்டை இந்த முக்கியமான 2 துறைகள் மட்டுமே கொண்டுள்ளது.
மருந்து பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் எற்றுமதி மதிப்பு 10.5 பில்லியன் மற்றும் 14.6 பில்லியன் டாலர்களாக உள்ளன, இது மொத்த ஏற்றுமதியில் 29% ஆகும். இதனால் இவ்விரு பிரிவு பொருட்களுக்கு மொத்தமாக டிரம்ப் அரசு வரி விலக்கு அளித்துள்ளது.
விதிவிலக்கு பெரும் துறைகள்:
டிரம்பின் புதிய 50% வரி விதிப்பிலிருந்து 30 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்து, ஸ்மார்ட்போன்கள், செமிகண்டக்டர் மற்றும் எரிசக்தி பொருட்களுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் சேவை துறையும் இதில் விதிவிலக்கு பெற்றுள்ளது.
டிரம்ப், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு 250% வரை வரியை விதிக்க உள்ளதாக ஏற்கனவே எச்சரித்துள்ளார். மேலும், ஸ்மார்ட்போன்களின் விதிவிலக்கு நிலை சந்தை சூழ்நிலைகளை பொறுத்து மாறக்கூடும். இதனால் இந்த பிரிவு பொருட்களுக்கும் அச்சுறுத்தல்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications