டிரம்ப் தாக்குதல் நிறுத்தம், அமைதி பேச்சுவார்த்தை என தொடர்ந்து பேசி வந்தாலும், ஈரான் மீது தாக்குதல்கள் தொடந்து நடந்து வருகிறது. அமெரிக்கா ஈரானின் முக்கிய நகரமான Isfahan பகுதியில் பெரிய அளவிலான விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல், ஈரானின் ஆயுதக் களஞ்சியத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 2,000 பவுண்ட் எடையுடைய 'பங்கர்-பஸ்டர்' குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை சாதாரண குண்டுகள் அல்ல; நிலத்தடியில் அல்லது பாதுகாப்பாக அமைக்கப்பட்ட கட்டிடங்களைக் கூட உடைத்து சென்று சேதப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு குண்டு.

இந்த தாக்குதலின் தீவிரத்தைக் காட்டும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இரவு குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டு உள்ளதை காட்டுகிறது. இது தாக்குதல் நடந்த போது பதிவு செய்யப்பட்ட நேரடி காட்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏன் இஸ்பஹான்?
Isfahan என்பது சாதாரண நகரமல்ல. இது ஈரானின் மத்திய பகுதியில், தலைநகர் Tehranக்கு தெற்கில் அமைந்துள்ளது. இந்த பகுதி, ஈரானின் ராணுவ மற்றும் அணு திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்கு யுரேனியம் செயலாக்கம் நடைபெறும் அணு ஆய்வு மையங்கள் உள்ளன. மேலும், விமான உற்பத்தி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இங்கு அமைந்துள்ளன. இதனால், இஸ்பஹான் ஈரானின் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே அமெரிக்கா 2000 பவுண்ட் எடை கொண்ட பங்கர்-பஸ்டர் குண்டை வீசியுள்ளது.
இஸ்பஹானை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மூலம் ஈரானின் ராணுவ திறனை நேரடியாக பாதிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதனால், அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த தாக்குதலுடன், டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு புதிய எச்சரிக்கையும் விடுத்துள்ளார். விரைவில் அமைதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நீர்வள உற்பத்தி அமைப்புகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளையும் அமெரிக்கா தாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மறுமுனையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. டிரம்ப், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். ஆனால், ஈரான் அதிகாரிகள் இந்த தகவலை முழுமையாக மறுத்துள்ளனர். அமெரிக்கா உடன் எந்த நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், அமெரிக்கா தவறான தகவலை பரப்புகிறது என்றும் ஈரான் தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.
இஸ்பஹான் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அமெரிக்கா-ஈரான் உறவுகளை மேலும் மோசமாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தெளிவில்லாத நிலையில், ராணுவ தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதனால், வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல், உலகளாவிய பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தைகளிலும் பெரிய தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications