உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்கா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் வரும் இதேவேலையில் புதிதாக அமைந்துள்ள ஜோ பைடன் அரசு அறிவித்துள்ள 1.9 டிரில்லியன் டாலர் பொருளாதார ஊக்கத் திட்டம், அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்பட்ட உள்ள 2.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான புதிய இன்பரா திட்டம் ஆகிய மிகப்பெரிய லாபத்தை அளித்துள்ளது.
அமெரிக்க அரசின் 1.9 டிரில்லியன் டாலர் பொருளாதார ஊக்கத் திட்டம் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா அசத்தல்
அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் படி விவசாயம் அல்லாத துறையில் மார்ச் மாதம் மட்டும் சுமார் 9,16,000 வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இது ப்ளூம்பெர்க் கணித்த 6,60,000 வேலைவாய்ப்புகளை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
9 லட்சம் வேலைவாய்ப்புகள்
மார்ச் மாதம் உருவாக்கப்பட்ட 9,16,000 வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை ஆகஸ்ட் 2020 எண்ணிக்கையை விடவும் அதிகமாகவும். இதுமட்டும் அல்லாமல் கடந்த 3 மாதம் தொடர்ந்து அதிகளவிலான வேலைவாய்ப்புகள் அமெரிக்கச் சந்தையில் உருவாக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதம் இதன் எண்ணிக்கை 4,68,000 ஆக இருந்தது.
முக்கியத் துறையில் அதிக வேலைவாய்ப்பு
மேலும் கொரோனா காலத்தில் அமெரிக்காவில் அதிகம் பாதிக்கப்பட்ட leisure மற்றும் hospitality துறையில் தான் தற்போது அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அமெரிக்கா தனது பழைய வேலைவாய்ப்பு அளவீட்டை அடைய இன்னும் 90 லட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்.
இந்தியாவின் நிலை
இதேவேளையில் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய டாப் 5 நகரங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் எண்ணிக்கை சுமார் 11 சதவீதம் குறைந்துள்ளது. இதேவேளையில் மொத்த இந்தியாவிலும் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை 1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications