உலக நாடுகளில் டெல்டா வகைக் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அனைத்து முன்னணி நாடுகளிலும் வேலைவாய்ப்பு சந்தை, வர்த்தகச் சந்தை, பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தென் கொரியா நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் கொரியா தனது பென்ச்மார்க் வட்டியை உயர்த்தியது.
கொரோனா தொற்றுக்குப் பின்பு உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் மத்தியில் முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது தென் கொரியா தான்.
இந்த அறிவிப்பு வெளியாகிய அடுத்த நாளே அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவர் முக்கியமான விஷயங்களைப் பேச உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால் உலக நாடுகளின் சந்தை பெரும் கவலையுடனும் தீவிரமாகக் கவனித்தும் வந்தது.
பெடரல் ரிசர்வ் ஜெரோம் பவல்
வெள்ளிக்கிழமை மாலையில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் தலைவர் ஜெரோம் பவல் பேசுகையில், நாட்டின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியில் மீண்டு வருகிறது, வேலைவாய்ப்பு சந்தையும் வலிமையுடன் மேகமாக மீண்டு வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் ஊக்குவிப்பு
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க அரசு அறிவித்துள்ள ஊக்குவிப்பு, கூடுதலான பணப்புழக்கத்தைத் திரும்பப் பெறத் துவங்கும் எனவும் அமெரிக்கச் சந்தைக்கும், சர்வதேச சந்தைக்கும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரம்
இதேபோல் அமெரிக்காவின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையின்படி வட்டி விகிதத்தை உயர்த்துவதில் எவ்விதமான அவசரமும் இல்லை எனவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் அமெரிக்கச் சந்தையில் உருவாகியுள்ள பணவீக்கம் தற்காலிகமானது என்றும் வருடாந்திர ஜேக்சன் ஹோல் மத்திய வங்கி சிம்போசிம் கூட்டத்தில் ஜெரோம் பவல் கூறியுள்ளார்.
டெல்டா வகை வைரஸ்
மேலும் அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இந்த நிலை வரைவில் கட்டுப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பி வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பணவீக்கம்
ஜூலை மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகப் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்தப் பணவீக்க உயர்வால் அமெரிக்காவில் பல வர்த்தகப் பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பணவீக்கம் எல்லாம் 5.5 சதவீதத்திற்கு மேல்..
வேலைவாய்ப்பு இல்லாதோர்
கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 3,53,000 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய வாரத்தின் 3,49,000 எண்ணிக்கையை விடவும் அதிகம் என அமெரிக்காவின் தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
5 வார உச்சம்
4 வாரத்திற்கு முன்பு இதன் எண்ணிக்கை 3,66,500ல் இருந்து படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து 5 வார உயர்வைப் பதிவு செய்துள்ளது அனைத்து தரப்பினரும் மிகப்பெரிய எச்சரிக்கையாகப் பார்க்கின்றனர். ஆனால் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் வேலை இல்லாமல் உள்ளனர்,


Click it and Unblock the Notifications