அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது 2 நாள் நாணய கொள்கை முடிவில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 4.25% முதல் 4.50% வரை மாற்றமின்றி வைத்திருப்பதாக அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் முக்கியமாக டிரம்ப் அரசுக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உலக நாடுகள் மீதான வரி விதிப்பால் உருவான வர்த்தகப் போர் மூலம் அந்நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும், பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்படும் என்றும் பெடரல் ரிசர்வால் கணிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த கணிப்பை உறுதி செய்யும் வகையில் பெடரல் ரிசர்வ் 2025-ல் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 1.4%-ஆக குறையும், பணவீக்கம் 3%-ஆகவும், வேலைவாய்ப்பின்மை 4.5%-ஆகவும் உயரும் என தனது கணிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்த முடிவு, உலகப் பொருளாதாரத்தையும், சர்வதேச பொருளாதாரத்தையும் பாதிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே சர்வதேச பொருளாதார வளர்ச்சி சரியும் என கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில் அமெரிக்காவில் உருவாகியிருக்கும் Stagflation அச்சம் முதலீட்டு சந்தைக்கு முன்கூட்டியே எச்சரிக்கை மணியை அடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
பெடரல் ரிசர்வ் அடுக்கும் பிரச்சனை:
வர்த்தகப் போர் அபாயம்: டிரம்பின் வரி விதிப்பு, பிற நாடுகளுடனான வர்த்தக உறவுகளை பாதித்து, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை (Supply Chains) சீர்குலைக்கலாம் என கணித்துள்ளது.
பொருளாதார தாக்கம்: மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவல், வரி விதிப்பின் தாக்கம் கோடை காலத்தில் அமெரிக்க நுகர்வோரை பாதிக்கும் வகையில் பணவீக்கத்தை உயர்த்தலாம் என எச்சரித்தார்.
காத்திருக்க முடிவு: வரி விதிப்பின் முழு தாக்கத்தை மதிப்பிடுவதற்கு மத்திய வங்கி இன்னும் கூடுதல் தரவுகளை எதிர்பார்க்கிறது. இதனால் வட்டி விகித குறைப்பை ஒத்திவைத்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி: 2025-ல் அமெரிக்காவின் GDP வளர்ச்சி 1.4%-ஆகவும், 2026-ல் 1.6%-ஆகவும் இருக்கும் என பெடரல் ரிசர்வ் கணித்துள்ளது. இது, மார்ச் 2025 கணிப்பை காட்டிலும் 0.3% குறைவாகும்.
பணவீக்கம்: இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் பணவீக்கம் என்பது 3%-ஆக உயரும், இது தற்போதைய 2.8% அளவை விட அதிகமாகும்.
வேலைவாய்ப்பின்மை: 2025 இறுதியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.5%-ஆக உயரும் எனவும் பெடரல் ரிசர்வ் கணித்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரத்தின் நிலைமை:
தற்போது அமெரிக்க பொருளாதாரம் அதிக கடனில் இருந்தாலும் ஆரோக்கியமாகவே உள்ளது. ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது "மந்தநிலை" நிலவுகிறது. டிரம்ப்-ன் வரி விதிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் அந்நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் சாராசரி இறக்குமதி வரி என்பசு 15-17 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதனால் அமெரிக்க பொருளாதாரத்தில் அடுத்த 2-4 மாத காலத்தில் "ஸ்டாக்ஃப்ளேஷன்" (Stagflation) அபாயம் அதாவது, உயர் பணவீக்கம் மற்றும் குறைந்த வளர்ச்சி-எழலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. ஏற்கனவே எலான் மஸ்க் அமெரிக்காவில் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் ரெசிஷன் வரலாம் என கூறியது நினைவிருக்கும்.
எலான் மஸ்க் கூறியது பலரும் மறுத்தாலும் இன்று அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் கூறியது அமெரிக்க பொருளாதாரத்தில் இருக்கும் சிக்கலான சூழல்நிலையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும் பெடரல் ரிசர்வ்-ன் கணிப்புகள் மூலம் உறுதியான முடிவுகளுக்கு வர முடியாவிட்டாலும், டிரம்ப்-ன் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த பின்பு அமெரிக்க பொருளாதாரத்தின் சுயரூபம் தெரிய வரும்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications