அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் இந்தியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பினை பறிப்பதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன் வைத்துள்ள குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமாக மாறி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பாக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவர்களை விட வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கே அதிக வேலை வாய்ப்பு கிடைப்பதாக குடியரசு கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்தியர்கள் பறிக்கின்றனர் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனத்தில் பொருளாதார வல்லுநராக பணியாற்றக்கூடிய ஆண்டனி என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கடந்த ஓராண்டு காலத்தில் அமெரிக்காவில் பிறந்தவர்கள் சுமார் 8 லட்சம் பேர் தங்களுடைய வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சுமார் பத்து லட்சம் பேர் அமெரிக்காவில் புதிதாக வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை வெளிநாட்டு பணியாளர்களுக்கான மையமாக மாறி உள்ளது என அவர் சாடியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் தற்போது அமெரிக்காவில் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கான வேலைவாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளது என தெரிவிக்கிறார். அதே வேளையில் வெளிநாட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு 3.7 மில்லியன் என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது என அவர் தெரிவிக்கிறார்.
பெரும்பாலான அமெரிக்கர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் ஏனெனில் இங்கிருக்கும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் வெளிநாட்டவர்களுக்கே வழங்கப்படுகிறது என அவர் பதிவு செய்துள்ளார்.
இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்த தொழில்நுட்பத் துறை வல்லுனர்கள் h1b விசா மூலம் அமெரிக்காவில் சென்று பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
அண்மையில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய குடியரசு கட்சி வேட்பாளர் வெளிநாட்டவர்கள் முறைகேடாக அமெரிக்காவில் நுழைகிறார்கள், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறார்கள் என கூறினார். அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வாய்ப்புகளும் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என அவர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான ஒரு ஆய்வு அறிக்கையின் படி சட்டபூர்வமாக அமெரிக்காவில் குடியேறிய சுமார் 30 மில்லியன் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள் என்றும் அது கடந்த 15 ஆண்டு காலத்தில் 20% அதிகம் என்றும் கூறுகிறது.
அதேபோல அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவர்கள் வேலைகளில் சேர்வது 10% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஊழியர்களின் எண்ணிக்கை 130.8 மில்லியன் ஆக இருக்கிறது என தெரிவித்தது.
தேர்தல் நெருங்கி வரும் வேலையில் சமூக ஊடகங்களிலும் இந்த கருத்து பரவலாக எதிரொலிக்கிறது. பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தியர்கள் தங்களுடைய வேலை வாய்ப்புகளை பறிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பின்னூட்டங்களை காண முடிகிறது. அவர்கள் அனைவரும் இந்தியாவிற்கே திரும்ப செல்ல வேண்டும் என கூறி வருகின்றனர்.
அதே வேளையில் சிலர் இந்தியர்களால் தான் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சியடைந்துள்ளன என்ற கருத்தை முன்வைக்கின்றனர். அமெரிக்க பொருளாதாரமும் அமெரிக்க நிறுவனங்களும் வளர்ச்சியடைவதற்கு இது போன்ற வெளிநாட்டு பணியாளர்களை காரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications