அமெரிக்க அதிபர் தேர்தலை உலகமே உற்று கவனித்து வரும் வேளையில் இந்தியப் பொருளாதார வல்லுனரும், பத்திரிக்கையாளருமான சாமிநாதன், இந்தத் தேர்தல் அதிபர் நாற்காலிக்குப் போட்டிப்போடும் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரில் யார் வெற்றிபெற்றால் என்ன நடக்கும் என்பதை விளக்கியுள்ளார்.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால்: இந்தத் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், இந்தியப் பொருளாதாரத்திற்கும், வர்த்தகத்திற்கும், பங்குச்சந்தைக்கும் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் இருக்காது, ஓரளவுக்குப் பாதுகாப்பான நிலையே இருக்கும். இதற்கு முக்கியமான காரணம் தற்போது ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதால் கொள்கை அளவிலும், செயல்பாட்டு அளவிலும் பெரிய அளவிலான மாற்றம் ஏதும் இருக்காது. இது இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளுக்குப் பெரிய அளவிலான நன்மையாக இருக்கும்.

இதனால் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்ற இந்தியா குறித்துக் கவலை ஏதுமில்லை, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மத்தியிலான நிர்வாக மாற்றிச் சிறிய அளவிலான தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தலாமே, தவிரப் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இருக்காது.
சீனா எப்படிப் பாதிக்கும்? ஜனநாயக கட்சி ஏற்கனவே சீனா மீது வைத்திருக்கும் அதன் நிலைப்பாட்டை எள் அளவும் மாற்றாது. தொடர்ந்து சீனா மீது வர்த்தகக் கட்டுப்பாடுகளும், ஏற்றுமதி - இறக்குமதி வரிகளை விதிப்பார்கள். ஆனால் ஒருபோதும் அதிரடியாகச் சீனா - அமெரிக்க வர்த்தகத்தை முடக்கமாட்டார்கள். இதைச் சீன - அமெரிக்க உறவு சில விரிசல்கள் உடன் தொடர்ந்து திறந்தே இருக்கும் எனச் சாமிநாதன் கூறியுள்ளார்.
சீனா - அமெரிக்க வர்த்தக உறவு முழுமையாகத் துண்டிக்கப்பட்டால் அது இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கமலா ஹாரிஸ் தலைமையிலான நிர்வாகம் அதை ஒரு போதும் செய்யாது.
டெனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால்: மறுமுனையில் இந்தத் தேர்தலில் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகள் மீது கடுமையான வரியை விதிக்கத் தயாராக உள்ளார். இந்தத் தேர்தல் பிரச்சாரம் துவங்கும் போது உலக நாடுகள் மீது 10 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்த அவர் கடைசிக் கட்ட பிரச்சாரத்தில் 20 சதவீதம் வரையில் வரியை விதிக்க உள்ளதாகப் பேசினார்.
இதேபோல் சீனாவை எடுத்துக்கொண்டால் முதலில் 60 சதவீதம் வரி விதிப்பதாகக் கூறிய டொனால்டு டிரம்ப் கடைசிக் கட்ட பிரச்சாரத்தில் 100 சதவீதம் வரையில் வரியை விதிக்க உள்ளதாகப் பேசினார். இதனால் டொனால்டு டிரம்ப் வெற்றி கட்டாயம் சர்வதேச சந்தை வர்த்தகத்தில் பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மேலும் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றால் தனது தேசப்பற்று மிகுந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்துள்ளதாகப் பொருள், இதனால் டிரம்ப் ஆரம்பம் முதல் அதிரடியாகக் களமிறங்குவார் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
இதைவிட முக்கியமாக இந்தத் தேர்தலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் டொனால்டு டிரம்ப்-ன் குடியரசு கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த வேளையில் டிரம்ப் அதிபரனால் அதிரடியான மாற்றங்களும், அறிவிப்புகளும் வெளியாகலாம்.
கொள்கை அளவில் பல அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வருவது மூலம் உலக நாடுகள் உடனான வர்த்தகம், நட்புறவில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது. உதாரணமாக வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீதான வரி விதிப்பு முதல் ஹெச்1பி விசா விதி மாற்றம் வரையில் பலவற்றையும் முழு அதிகாரத்தையும் கையில் எடுக்க வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications