உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகத் துவங்கியுள்ள வேளையில், ஆரம்பம் முதல் அதிரடி காட்டி வந்த டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அமெரிக்கத் தேர்தலில் 270 இடங்களில் வெற்றி பெற்றால் அதிபர் நாற்காலியில் அமரலாம்.
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் டொனால்டு டிரம்ப் 210 இடங்களில் வெற்றிபெற்று, 200 என்ற அளவீட்டைத் தாண்டியுள்ளார், இதோடு பல முக்கிய மாநிலங்களில் டொனால்டு தலைமையிலான குடியரசு கட்சி முன்னிலையிலும் உள்ளார்.

இதேவேளையில் டெனால்டு டிரம்ப்-ஐ எதிர்த்துப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தலைமையிலான ஜனநாயக கட்சி வெறும் 112 இடங்களில் (எலக்டோரல் வோட்) மட்டுமே பெற்றுள்ளது. இதனால் டொனால்டு டிரம்ப்-க்கு வெற்றி வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது இப்போதே தெரிந்தாலும், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் அடுத்த 2 நாட்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொனால்டு டிரம்ப் 2வது முறையாக ஆட்சியைப் பிடிக்கப்போகும் வேளையில், இன்று உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் டிரம்ப் இணைய தளத்திற்குப் பார்வையாளர்களாக குவிந்த காரணத்தால் இத்தளம் மொத்தமாக முடங்கியுள்ளது.
ஆரம்பமே அதிரடி என்பது போல் தேர்தல் முடிவுகளிலும் சரி, மக்களிடம் கிடைத்த வரவேற்பும் சரி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டிhttps://www.trump.com/ என்பது தி டிரம்ப் ஆர்கனைசேஷன் அமைப்பின் இணைய தளமாகும். டொனால்டு டிரம்ப் தலைமையில், பெயரில் இயங்கும் 250க்கும் அதிகமான வர்த்தகம், முதலீடுகள், பிராண்டுகள், கிளை நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் தி டிரம்ப் ஆர்கனைசேஷன் தான் ஹோல்டிங் நிறுவனம்.
1968ல் தி டிரம்ப் ஆர்கனைசேஷன் நிறுவனத்தில் இணைந்த டொனால்டு டிரம்ப், 2016ல் அதிபரான பின்பு தனது இந்நிறுவனத்தின் பதவிகளில் இருந்து 2017ஆம் ஆண்டு வெளியேறினார். தி டிரம்ப் ஆர்கனைசேஷன் அமைப்பின் முக்கிய வர்த்தகம் என்றால் ரியல் எஸ்டேட், ஹோட்டல், ரெசார்ட்ஸ், வீடு கட்டுமான திட்டங்கள், கால்ப் மைதானம் தான்.
இதை தாண்டி கட்டுமானம், விருந்தோம்பல், கேசினோக்கள், பொழுதுபோக்கு, புத்தகம் மற்றும் பத்திரிகை வெளியீடு, ஒளிபரப்பு ஊடகம், மாடல் மேனேஜ்மென்ட், ரீடைல், நிதிச் சேவைகள், உணவு மற்றும் பானங்கள், பிஸ்னஸ் ஸ்கூல், ஆன்லைன் டிராவல், கமர்சியல் மற்றும் பிரைவேட் ஏவியேஷன், அழகி போட்டிகள் போன்றவற்றை நடத்தியும், நிர்வாகம் செய்தும் வருகிறது.
டொனால்டு டிரம்ப்-ன் மொத்த சொத்து மதிப்பு நவம்பர் 5ஆம் தேதி 6.7 பில்லியன் டாலராக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications